பக்கம்:பேசாத பேச்சு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பேசாத பேச்சு

இலங்கையில் புகை புகா வாயிலிலும் புகுந்து புகுந்து தேடிய அநுமன் எளிதிலே சீதையைக் காணவில்லை, இலங்கைமா நகரின் ராட்சச நாகரிகத்தை முதலிலே நன்முக ஊடுருவிப் பார்த்தான். களிக்கின்ருர் அலால் கவல்கின்ருர் ஒருவரைக் காணேன்' என்று மனம் உடைந்து புலம்பினன். -

ஒவ்வொருவர் கண்ணேயும் பார்த்தான். எல்லாம் அரக்கர் கண்கள்; காரணம் இன்றியேயும் கனலெழச் சிவக்கும் கண்கள்.” இந்தக் கூட்டத்தில், கவல்கின்றவ

ளாகிய சீதையைக் காண்பது மிகவும் அரிதாகவே, எங்கே தன் காரியம் நிறைவேருமற் போய்விடுமோ என்று. கலங்கினுன்; கடைசியிலே கண்டான். - o

சீதையின் உள்ளத்தை அவள் கண்கள் காட்டின. எப்பொழுதும் அழுதவண்ணமாகவே இருந்தமையால் மழைபொழியும் கண்களாக அவை இருக்கன. இடை இடையே கிக்கெலாம் அளந்து பார்க்க விரியும் கண்க ளாக இருந்தன. கடல் போல ஆழ்ந்த கண்கள் அவை. அவற்றைப் பார்த்தால் சீதையின் உள்ளப் பெருமை நன்முகத் தெரியும். கடலைப்போல் ஆழ்ந்த கண்ணிலிருந்து பெருகும் நீர் கிரம்பிய தடாகத்தில் அவள் அன்னத்தைப் போல இருந்தாள். - - . . . . . . . கடல்துணை நெடியதன் கண்ணின் நீர்ப்பெருந்

தடத்திடை இருந்ததோர் அன்னத் தன்மையாள். அந்தக் கண்களைக் கொண்டு, இவளே சீதை' என்று தெளிந்தான் அநுமன். அவற்றின் தோற்றத்தில் அவளு டைய துயரத்தையும், அவற்றின் ஒளியிலும் ஆழத்திலும் அவள் உள்ளப் பெருமையையும் உணர்ந்துகொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/49&oldid=610204" இலிருந்து மீள்விக்கப்பட்டது