பக்கம்:பேசாத பேச்சு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த தந்திரம்

தருமபுத்திார் ராஜசூய பாகம் செய்ய எண்ணிக் கண்ணபிரான் முதலியவர்களோடு ஆலோசனை செய்தார். :: உலகத்தில் உள்ள மன்னர்களில் பலரை ஜாாசந்தன் சிற்ைப்படுத்தி யிருக்கிருன். அவனே முதலில் வெல்ல வேண்டும். அந்தக் காரியத்திற்கு வாயுப்த்திரளுகிய మౌLGar ஏற்றவன்' என்று கண்ணன் கூறினன். அறக் தின் சேயாகிய தருமர் அது கேட்டு, அங்ஙனமே செய்ய

- 53

லாம் ” என்று உடன்பட்டார்.

" நாம் அாசக் கோலத்தோடு அவன் நகரத்தை அணுக முடியாது. நம்மையும் பிடித்துச் சிறையிட்டு விடுவான். ஏதேனும் தந்திமம் செய்து அவனே அணுகி வீமனைக் கொண்டு. அவனே வெல்லவேண்டும். நானும் அர்ஜுனனும் வீமனும் அந்தணர்களைப் போல வேஷம் பூண்டு செல்கிருேம் ' என்று கோபாலன் கூறி மற்ற இரு

வரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

பிராமண வேஷம் புனைந்த அம்மூவரும் மகத நாட்டுள் ஜாாசந்தனுடைய ராஜதானி நகரமாகியு கிரிவிாஜத்தை அடைந்தனர். அவன் அரண்மனையை அடைந்து வாயில் காவலரிடம், மூன்று அந்தணர் உன்னேப் பார்க்கும் பொருட்டு வந்திருக்கின்றனர் என்று தெரிவிப்பாயாக எனச் சொல்லி அனுப்பினர். அாசன், அழைத்து வாருங்கள்” என்று சொல்ல மூவரும் உட்புகுந்து அவன் இட்ட தவிசில் அமர்ந்து ஆசியும் கூறினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/51&oldid=610206" இலிருந்து மீள்விக்கப்பட்டது