பக்கம்:பேசாத பேச்சு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பேசாத பேச்சு

தும் பாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய்” என்று வேண்ட்வே, குன்ருல் அன்று மழை தடுத்த கொற்றக் கவிகைக் கோபாலன் சொல்லத் தொடங்கினன். - தேவர்களுக்குப் பகைவனுகிய பிருகத்ாதன் என் பவன் இந்த மகத நாட்டுக்கு அரசனுக இருந்தான். அந்தக் கொடியோனுடைய மைந்தனே ஜாசந்தன். உலகத்து அரசர் எண்ணுயிரம் பேரைப் பசுவாகக் கொண்டு நாமேதம் செய்ய வேண்டுமென்ற ஆசையில்ை கைப்பட்ட அரசர்களேயெல்லாம் பற்றிச் சிறை வைத்தான் இவன். அதனல் தேவர்கள் முதலியோர் இவன் பேரைச் சொல்லவே அஞ்சுவார்கள்.

"இவன் பிறந்தது ஆச்சரியமான செய்தி. பிாகத் ரதனுகிய இவன் தங்தை பல காலம் மகவு ஒன்றுமின்றி வாடி, அப்பால் சண்டகெளசிகன் என்னும் முனி வனைப் பணிந்து பிள்ளே வாம் கேட்டான். அந்த முனிவன் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அதை அவன் மனேவிக்கு அளிக்கும்படிக் கூறினன். பிருகத்ாதன் அதனைப் பெற்றுச் சென்று தன் அங்கப்புரத்தை அணுகித் தன் மனேவியர் இருவரிடமும் அளித்தான். காசிராஜன் மகளிராகிய அவ் விருவரும் அந்த மாங்கனியை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்முக உட்கொண்டார்கள். அது முதல் அவ் விருவரும் கரு வாய்த்தனர். இருவர் வயிற்றிலும் பாதிப் பாகி வடிவம் வளர்ந்து வந்தன. கருப்பம் முற்றியவுடன் இருவரும் ஈன்றனர். ஒரு குழந்தையின் ஒரு பாதியை இருக்கியும் மற்ருெரு பாதியை மற்முெருக்கியும் ஈனவே, 'இது ஏதோ உற்பாதம் என்று அஞ்சிய மகத வேந்தன் அவ் விாண்டு பாதிகளேயும் தன் ராஜதானி காத்துக்கு வெளியே எறியும்படி செய்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/55&oldid=610210" இலிருந்து மீள்விக்கப்பட்டது