பக்கம்:பேசாத பேச்சு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பேசாத பேச்சு

தில், இங்கே வேடர்கள் இருக்கிருர்கள். நான் கவனிக்க வேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. நீங்கள் முன்னலே சென்று அரசனே அடையுங்கள். நான் பிறகு வருவேன்' என்று சொல்லி என்னே அனுப்பிவிட்டான்'

என ருள. -

உதயணன் அது கேட்டு யூகி வருவான் என்று எதிர் நோக்கியிருந்தான். சாங்கியத்தாய் அந்தப்புரம் சென்று வாசவதத்தையைப் பார்த்து அன்போடு தழுவிக்கொண்டு உரையாடினுள். பிறகு அவளிடம் ரகசியமாக யூகி கூறிய வற்றைச் சொல்லி, நம் அரசன் தன் அரசுரிமையை எய்தி நிலையான இன்பத்தைப் பெற இத்தகைய தந்திரங்களே மேற்கொள்வது அவசியம்’ என்ருள். வாசவதத்தையும் முதலில் மயங்கிலுைம், முடிவில் இன்பத்தைத் கருமென்ற துணிவினல் அவ்வாறே செய்ய உடன்பட்டாள்.

சாங்கியத்தாய் செய்யவேண்டிய ஒரு காரியத்தை இன்னும் செய்யவில்லை; யூகி இறந்தான் என்ற செய்தியை உதயணனுக்குச் சொல்லவில்லை. அவன் முன் வாய் கிறந்து கூறுவது சாத்தியமாகத் தோன்றவில்லை. உதயணன் வேடர்களால் சூழப்பட்டான் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரக்திலே, மன வலியுடைய பூகி மயங்கி விழுந்ததை அவள் கண்ணுரப் பார்த்தவள் அல்லவா? துணிவும் மன வலியும் உடைய யூகியின் கிலேயே அதுவானல் உதயணன் என்ன பாடு படுவானே ! -

இவற்றை யெல்லாம் எண்ணிய அத் தவ முதமகள்,

இதற்கு என்ன செய்யலாம் என்பதை யூகியினிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டுமென்று நிச்சயித்தாள். அவன் மறைந்திருந்த இடத்தை கண்ணிச் சிக்கல்ான த்ன் கிலையைப் புலப்படுத்தினுள். * ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/69&oldid=610224" இலிருந்து மீள்விக்கப்பட்டது