பக்கம்:பேசாத பேச்சு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு பொருள் - 65

லோரையும் வெருட்டி அடித்துவிடும் ஆற்றல் அவனிடம் இருந்தது. அவன் ஒற்றைக் கண்ணன்.

அவனேக் கண்டவுடன், சைகைக் கலைஞரை அடக்க இவனே சரியான ஆயுதம் என்று அவ்வூரார் எண்ணி அவனுக்கு உற்சாகம் உண்டாக்கினர். "அவர் தமக்குத் தான் சைகை யெல்லாம் தெரியுமென்று கர்வம் பிடித்து அலைகிருர். நீ எப்படியாவது அவரை மடக்கினல் உனக்கு நல்ல பரிசு அளிப்போம்” என்று சொன்னர்கள்.

"அப்படியே ஆகட்டும்” என்று அவன் அபயம் தந்தான். - - - வெளியூரிலிருந்து ஒரு சைகை சாஸ்திரி வந்திருக் - கிரு.ர். அவர் நம்முடைய பாஷையே அறியாதவர். பல நாடுகளில் சென்று தம் கலைத் திறமையைக் காட்டிப் பரிசு பெற்றவர்” என்ற செய்தியை உள்ளுர்ச் சைகை சாஸ்திரி யினிடம் ஒருவர் சொன்னர். . . . . . . .

'இந்த மூவுலகங்களிலும் எனக்கு மிஞ்சி எவனும் இல்லை. அப்படி இருந்தால் இங்கே வாச் சொல்லுங்கள், பார்க்கலாம். அவன் பல்லேப் பிடித்துப் பார்த்து விடுகி றேன்” என்று கலைஞர் பெருமிதத்தோடு கூறினர்.

இருவரும் சங் தித்தனர். பெரிய சபையின் நடுவில்ே இருவரையும் உயர்ந்த ஆசனத்தில் அமரச்செய்து, பேசாத பேச்சில் வாதம் கடத்தும்படி வேண்டிக்கொண்டனர்.

இருவரும் உற்சாகமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந் தனர். உள்ளுர்க் கலைஞரே முதலில், சைகை வாதத்தை ஆரம்பிக்கட்டும் என்று ஒற்றை விழிக் கலைஞன் தெரிவித் தான். அப்படியே அவர் தொடங்கினர். முதலில் ஒரு விாலைக் காட்டினர். அயலூான் உடனே இரண்டு விாலை

பே. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/74&oldid=610229" இலிருந்து மீள்விக்கப்பட்டது