பக்கம்:பேசாத பேச்சு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கித அழைப்பு 79

குறிஞ்சிப்பண் நடு யாமத்துக்கு உரியது; காதலர் உறவு செய்து ஒன்றுபடும் தினேயாகிய குறிஞ்சிக்கு உரியது. அதனே அவள் எதிர்பாராதபடி பாடியதற்குக் காரணம் மற்றவர்களுக்கு விளங்கவில்லை. அவளது கண் விச்சிலே குளிர்ந்து அமர்ந்திருந்த காதலனுக்குத் தெளி வாக விளங்கியது. -

பாடல் பயிலும் பணிமொழி தன்பணத்தோள் கூடல் அவாவாற் குறிப்புணர்த்தும்-ஆடவற்கு மென்றிந் தொடையாழின் மெல்லவே தைவத்தாள் இன்றிங் குறிஞ்சி இசை,

(பணிமொழி - மெத்தென்ற பேச்சையுடையவள். பணேத்தோள் - மூங்கிலேப் போன்ற தோள். குறிப்பை உணர்த்தும் - உள்ளக் குறிப்பை உணர்த்திய ஆடவர்க்குகாதலனுக்கு தொடை - நரம்புக் கட்டு, தைவத்தாள் - வாசித்தாள்.) -

இத்தகைய இங்கித அழைப்புகள் காதலுலகத்துக் காட்சிகளென்பதைக் கதையும் கவிதையும் மக்குப் புலப் படுத்துகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/88&oldid=610243" இலிருந்து மீள்விக்கப்பட்டது