பக்கம்:பேசாத பேச்சு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபத்தின் கோலம் х 83

தான் என்பம். சலம் உருவத்தால் ஒன்பது வகைப்பட் டாலும் இன்ப விளைவாகிய பயனுல் ஒன்றுதான். சர்க்கரையைக் கொண்டு கைப்புச் சுவையுடைய பாகற்காய் உருவமும், கார்ப்புச் சுவையுடைய மிளகாயும், துவர்ப்புச் சுவையுடைய பல்ாக் கொட்டையும், இனிப்புச் சுவை யுடைய வாழைப் பழமும் செய்தாலும் அவை அனைத்தும் இன்சுவை உடையனவே. மற்றவை வெறும் தோற்றம். ாலமும் அத்தகையதே. சந்திரமதி புலம்பலிலும் சகுந்தலையும் துஷ்யந்தனும் காதல் உரை பேசுவதிலும் இரணியன் கோபத்தாற் குமுறுவதிஅம்-நாடகமாயினும் காவியமாயினும் நாம் நுகர்வது இன்பந்தான். அந்த இன்பத்தை விவகாரத்துக்காக, உருவ வேறுபாடு பற்றி வகைப்படுத்தியிருக்கிருர்கள். சத்திரமதி புலம்புவதில் வரும் இன்பம் அவலச் சுவை அல்லது கருண சன்மென்

றும், காதல் உரையில் விளைவது இன்பச் சுவை அல்லது . சிருங்காா ரஸ்மென்றம், இரணியன் கோபம் கண்டு எழுவதை வெகுளிச் சுவை அல்லது ரெளத்திர ரீஸ்மென். அறும் வேறு வேறு பெயர்களால் குறிப்பார்கள். இப்படியே அருவருப்பு உணர்ச்சியினல் வரும் இன்பத்தை இளிவால் அல்லது பீபத்லம் என்றும், அச்ச உணர்ச்சி காரணமாக எழுவதை அச்சச் சுவை அல்லது பயானகம் என்றும், வியப்பினல் எழுவதை மருட்கை அல்லது அற்புதமென் மும், நகைக்குக் காரணமாவதை நகைச்சுவை அல்லது ஹாஸ்யமென்றம், சம நிலை காரணமாகத் தோன்றுவதை கடுவுநிலைச் சுவை அல்லது சாந்த சஸ்மென்றும் வேறு பிரித்து அமைத்திருக்கிறர்கள். . . . . . . . . . . .

இந்த சலங்களே உண்டாக்குவதற்கு ஒரு காண மான சத்துவங்கள் இயற்கையிலே நிகழ்வன. அவற்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/92&oldid=610247" இலிருந்து மீள்விக்கப்பட்டது