பக்கம்:பேசாத பேச்சு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பேசாத பேச்சு

புருவம் மேல் ஏறுவதும் கண் சிவப்பதும் சாமானிய மாணவனுக்கும் உண்டு. ஆனல் தலைமை உள்ளவனிடத் திலேதான் கோபத்திலே நகை தோன்றும், எல்லோருக் கும் தலைவனுகிய சிவபிரானுக்கும் முப்புரம் பொடித்த கோபத்திலே நகைப்பல்லவா தோன்றிற்று? விசுவாமித் திார் கோபத்துக்கு முன்னும் பின்னும் உலகமே தொழிற் படுகிறது; கலங்குகிறது; இருள்கிறது. அவர் தவமுனிவர். அந்தத் தவ வலிமை அவர் உள்ளத்திலே பிறந்தாலும் #_© &Ꮛ முழுதும் வியாபிக்கும் - ஆற்றல் உடையது. கம்பர் வாக்கிலேயே விசுவாமித்திாருடைய கோபக் கோலத்தைப் பார்க்கலாம்.

என்றனன்னன் றலும், முனிவோ டெழுந்தனன்மண்

படைத்தமுனி; இறுதிக் காலம் அன்றென.ஆம் என இமையோர் அயிர்த்தனர்ம்ேல்

வெயில்க்ரந்தது; அங்கும் இங்கும் நின்றனவும் திரிந்தன; மீ நிவந்தகொழுங் கடைப்புருவம்; நெற்றி முற்றச் சென்றனவத் தனந்கையும்; சிவந்தனகண்; இருண்ட்னபோய்த் திசைகள் எல்லாம்.

. (என்றன்ன்-நானே வருகிறேனென்று தசரதன் கூறி ன்ை. இமையோர்.தேவர். அயிர்த்தனர்-ஐயமுற்றனர். கரந்தது-மறைந்தது. மீ நிவந்தன-மேலே ஏறின.

விசுவாமித்திாாது கோபம் புராணப் பிாசித்தி பெற்றது. அதற்குமேல் கோபத்துக்கே பெயர் பெற்றவர் அர்வாச மகா முனிவர். --- கோபம் கொள்பவனுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு வலிமை உண்டோ அவ்வளவுக்கு - அவ்வளவு அதன் விளைவு அதிகமாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/97&oldid=610252" இலிருந்து மீள்விக்கப்பட்டது