8 பேசும் கலை வளர்ப்போம் துப் பார்த்து, ஏற்க முடிந்தவைகளை, ஏற்கக்கூடியவை களை ஏற்றுக் கொள்ளலாம். 68 'விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்" என்றார் வள்ளுவர்! கருத்துக்களை ஒழுங்காக அமைத்து இனிமையாகச் சொல்லக்கூடியவரைப் பெற் றால் அவருடைய ஏவலை உலகம், விரைந்து கேட்டு அவ் வாறு நடக்கும், என்பது இந்தக் குறளுக்குப் பொருள். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, எண்ணத்தில் எழுகின்ற கருத்துக்கள் மட்டும் போதாது, அவற்றைச் சொல்ல வேண்டிய முறையில் சொன்னால்தான், வெற்றி கிட்டும் என்று சொல்வன்மை என்ற அதிகாரத்தையே வழங்கியுள்ளார் வள்ளுவர்! "அம்மா அப்பா" என்று மழலை பேசத் தொடங்கி ஆங்கிலம் போன்ற மொழிகளில் பட்டம்பெற்று எண்ணற்ற சொற்களைக் கற்றவர்களாகக்கூட இருக்கலாம்! சொற்களைத் தெரிந்து வைத்திருப்பது என்பது வேறு- அவற்றை ஆள்வது என்பது வேறு! அந்தச் சொல்லை ஆளுவது பற்றிய சுவையான தகவல்களைத்தான் உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன். 1970-ஆம் ஆண்டு மேல்நாடுகள் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்தபோது இலண்டன் மாநகரத்தில் பல பகுதி களைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. "ஹைட் பார்க்' (HydePark) என்று ஒரு அழகான இடம்! அதனை ஒருசொற் பொழிவுக்களம் என்று கூடக் கூறலாம். அந்தப் பார்க்கில் இடையிடையே உள்ள பரந்த வெளிகளில் பசும் புல் தரை களில் நூற்றுக்கணக்கில் மக்கள் வட்டமாக நின்று கொண்
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை