பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணா நிதி 13 உள்ள தூண்கள், சுவர்கள், இவைகளின் முன் எல்லாம் நின்று பேசிப் பார்த்திருக்கிறேன். என் வீட்டார் அனை வரையும் தாழ்வாரத்தில் உட்கார வைத்து, நான் முற்றத்து மையத்தில் நின்று பேசிக் காட்டி ஒத்திகை நடத்தியிருக்கிறேன். அதனால்தான் எனது மாணவப் பருவத்து முதல் மேடைப் பேச்சு, ஆசிரியர்கள், மாணவர் கள் அனைவராலும் பாராட்டப்படுகிற அளவுக்கு அமைந்தது. சபை நடுக்கத்தால் ஏற்படுகிற வேதனையான விளைவுகளுக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். ‘கடவுள்’என்ற தலைப்பில் எனதுபள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி! அதில் எனக்கு எதிராகப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ நண்பர்,பேசத் தொடங்கும்போதே நாக்கு தடுமாறிற்று. எப்போது பேச்சை முடிப்பது என்பதி லேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்த நண்பர் "இத்துடன் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்” என்று கூறுவதற்குப் பதிலாக -"இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்” என்றாரே பார்க்கலாம்! கூட்டம் 'கொல்'லென்று சிரித்துவிட்டது. நடிகர் திலகம் சிவாஜி நடித்த "கட்டபொம்மன்" நாடகம், சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடை பெற்றது. அந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டும் வாய்ப்பு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் எனக் குக் கிட்டியது. "தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க!" என்று அண்ணா சிவாஜிக்குக் கூறிய அன்பு வாழ்த்து-அந்த நிகழ்ச்சியில்தான்! ஒரு பெரும் பட அதிபர், நாடகம் காண வந்திருந்தார். திடீரென சிவாஜி அவர்கள் அவரை மேடைக்கு அழைத்து மாலை அணிவித்து இரண்டு வார்த்தை வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் படஅதிபர் ஒலிபெருக்கியின்