கலைஞர் மு.கருணா நிதி 15 அடிப்படையாகக் கொண்டது இயல்; ஒலியை அடிப்படை யாகக் கொண்டது இசை! அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது கூத்து! மலையையோ, மனிதன் தொடக்க காலத்தில் மொழியறிவே இல் லாதவனாகத்தானிருந்தான். கல்லையோ மரத்தையோ, நதியையோ கண்டபோது அவற்றுக் கெல்லாம் அவன் பெயர் எதுவும் வைக்கவில்லை. அதனால் சொற்கள் தோன்றிட வேண்டிய அவசியமே இல்லை, சைகைகள் வாயிலாகத்தான் மனிதர்கள் ஒருவருக்கொரு வர் எதையும் உணர்த்திடத் தலைப்பட்டனர். அசைத்து, தலைகளை ஆட்டி, ஊமைகளைப் போலத் தான் அவர்கள் வாழ்க்கையை நடத்தினர். C கைகளை அதன் பிறகு, தொலைவில் இருப்பவரை அழைப்ப தற்கு ஒருவிதமான ஒலியையும், அருகில் இருப்பவரைத் தம் பக்கம் திரும்பச் செய்வதற்கு ஒருவிதமான ஒலியையும் எழுப்பினர். "ஏ" "ஓ" "ஈ இப்படி ஒலிக்குறிப்புகள் வாயி லாகவே ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டனர். மூன்றாவது கட்டமாகத்தான் மனித சமுதாயம் தான் வாழ்ந்த அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப சொற்களைப் பயன் படுத்தத் தொடங்கியிருக்கிறது! இயல், இசை, கூத்து என்பதில் இப்போது "இயல்" முதல் வரிசையில் இருந்தாலுங்கூட, மனிதன் தோன்றி வளர்ந்து பல மாறுதல்களைப் பெற்றிடாத தொடக்க காலத்தில் அசைவுகள் - சைகைகள் மூலம் வாழ்க்கையை நகர்த்தியதால் கூத்து என்பதுதான் அப்போது முதலி டத்தை வகித்திருக்கிறது. ஒலியை அடிப்படையாகக் கொண்ட இசை, அப்போதும் சரி--இப்போதும் சரி; நடு இடத்திலேயே இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருந்த இயல், சொற்களின் அடிப்படையில் இயங்குவதால்- அந்தச் சொற்கள் இசைக்கும் தேவைப்பட்டு, அதே போல கூத்துக்கும் தேவைப்பட்டு, முதல் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது.
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை