பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பேசும் கலை வளர்ப்போம் மனப்பாடம் செய்துகொண்டு மேடையேறுகிற பல இளைஞர்கள், பாடம் செய்ததைப் பரபரப்புடன் ஒப்பு விக்கும்போது இடையில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் திகைத்துப்போய் நின்று, மீண்டும் தாங்கள் மனப்பாடம் செய்ததைத் தொடக்கத்திலிருந்து கூற முனைவார்கள்! அவர்களுடைய மூளையில் பெரிய விஷயங்களை ஏற்றா மல் - நாட்டு நடப்பில் அவர்களுக்குத் தெரிந்திருக்கிற விஷயங்களை மட்டுமே பதியவைக்க வேண்டும். அப் பொழுதுதான், தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே புரியும். "ஏதென்சு நகரத்து அறிவுக் கிழவன் சாக்ரடீசைப் போல்-பொதுவுடமைப் பூங்காவுக்குக் கருத்து விதை காரல்மார்க்சைப்போல்-இருளில் ஒளி கண்ட இங்கர்சாலைப் போல் - தன்மானச் சிங்கம் தந்தை பெரியார் விளங்கினார்." யிட்ட இப்படி எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து மேடையில் பேசுகிற இளம் பேச்சாளருக்கு, சாக்ரடீஸ் என்றால் யார் என்று தெரிந்திருக்க வேண்டுமல்லவா? மார்க்ஸ் பற்றியும் இங்கர்சால் பற்றியும் அந்த இளம் பேச்சாளர் உணர்ந்திருக்க வேண்டுமல்லவா? க அதனால் பெரியார் விழாவில் பேசுகின்ற இளம் பேச்சாளருக்கு, எதைக் கற்றுத் தந்தால் தந்தால் மனத்தில் பதியுமோ, அதை மட்டுமே கற்றுத்தர வேண்டும். பாடு "பெரியார், சாதிகள் ஒழியவேண்டுமென்று பட்டவர்! பிர்மாவின் முகத்திலே ஒரு சாதியும், தோளிலே ஒரு சாதியும், தொடையிலே ஒரு சாதியும், காலிலே ஒரு சாதியுமாக மனிதர்கள் பிறந்தார்கள் என்பதைப் பெரியார் மறுத்து எல்லோரும் ஒரே குலம்தான்-மனித குலம்தான் என்று முழங்கினார்.” இப்படி எளிய முறையில் எளிய நடையில் இளம் பேச்சாளர் பயிற்சி பெற்றால்தான், அவர் உதடுகள்