பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 டு பேசும் கலை வளர்ப்போம் உணர்வோடு பயன்படுத்திய அந்தச் சொல்லைத்தான், தானும் குறிப்பிட வேண்டுமென்று அந்த உறுப்பினர் கருதிக்கொண்டதால் ஏற்பட்ட விளைவு அது! 'மலிவு' என்ற சொல்லுக்குக்கூடப் பொருள் புரியாத நிலை! மனத்தில் நினைத்தது வேறு! உதட்டில் வெளிப் பட்டது வேறு! இதிலிருந்து, சொற்களை நிறைய அறிந்திருப்பதும்- உள்ளத்திற்கும் உச்சரிக்கப்படும் சொற்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டுமென்பதும் பேச்சாளர்களுக்கு முக்கிய மான தேவைகள் என்பது உணரப்படுகிறதல்லவா? 4 நெஞ்சம், சொற் பஞ்சமுடையதாயிருந்தால் மேடைப் பேச்சால் மக்களைக் கவர்ந்திட இயலாது. கிலருக்கு மனத்தில் நல்ல கருத்துக்கள் தோன்றும். அவற்றை வெளிப்படுத்த உரிய சொற்கள் இல்லாமல் தவித்திடுவர். வேறு சிலருக்குச் சிறந்த கருத்துக்களும் அவற்றை வெளிப்படுத்தக் கூடிய சொற்களும்கூட உள்ளத்தில் நிறைந்திருக்கும். ஆனால் அப்படிக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடிய பேச்சுவன்மை அவர்களுக்கு வாய்க் காமல் போய்விடக் கூடும். பல மொழிகளில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற முதுபெரும் புலவர்கள் பலர் எதிரே அமர்ந்திருக்கும் அவையோரை ஈர்த்திடும் வண்ணம் விரிவுரையாற்ற முடியாமல் தோல்வியுற்றிருக்கின்றனர். சொற்பொழி வுக்குத் தக்கவாறு குரலின் ஏற்ற இறக்கம், எத்தகைய சொற்களைப் பயன்படுத்த வேண்டுமென்று ஏற்படுத்திக் கொள்கிற பழக்கம் இவையெல்லாம் ஒரு பேச்சாளர்,