24 பேசும் கலை வளர்ப்போம் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. நான், கவிஞர் கண்ண தாசன், அரங்கண்ணல், முல்லை சக்தி ஆகியோர் ஒரு காரில் அந்த இடம் நோக்கிப் புறப்பட்டோம். இரவு எட்டு மணியிருக்கும். கூட்டம் நடைபெறும் இடம் சரியாகத் தெரியவில்லை. ஒரு வெற்றிலை பாக்குக் கடையோரமாகக் காரை நிறுத்திவிட்டு "அய்யா! இங்கே கூட்டம் எங்கே நடக்கிறது?" என்று விசாரித்தோம்! கடை வாசலில் வாழைப்பழம் உரித்துத் தின்று கொண்டிருந்த ஒருவர் எங்களைப் பார்த்து, அதுவா! அண்ணாத்துரை கச்சேரி தானே? இப்படி இடது பக்கமாகத் திரும்பிப் போங்க!" என்று பதில் அளித்து வழி காட்டினார். சொற்பொழிவை ஒரு இசைக் கச்சேரியாகவே கருதிக் கொண்டனர். 1953-ல் நான் கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையில் இருந்தபோது, அங்கிருந்த ஒரு சாதாரணக் கைதி என்னைப் பார்த்து கைகூப்பி, "நமஸ் காரங்க!" என்று சொன்னார். "என்னைத் தெரியுமா?” என்று அவரைக் கேட்டேன். "ஓ! நல்லாத் தெரியுமே! மூணு மாசத்துக்கு முன்பு மணப்பாறையிலே கச்சேரிக்கு வந்திருந்தீங்களே” என்றார் அந்தக் கைதி! கூட்டங் களையே கச்சேரி என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த நிலையைக் கடந்து எவ்வளவு தூரம் தமிழ்நாடு முன்னேறி யிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? இவ்விதம் முன்னேறியுள்ள பேசும் கலையில் வல்லவர்களாகத் திகழ, பெரும் உழைப்பைத் தர வேண்டும் என்பதைப் பேச்சாளர்களாக விரும்புவோர் புரிந்துகொள்ள வேண்டும். "அக்ராசனாதிபதி அவர்களே!" என்று விளித்தது மாறி-"அவைத்தலைவர் அவர்களே!" என்று தமிழில் ஒலிக்கிற காலம் இது! "ஸ்ரீமான் அவர்கள்!" என்பது "திருவாளர் அவர்கள்" என்று மாறியிருக்கிற காலம் இது! இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு எழுத்தாளர்கள் மட்டு
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை