பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பேசும் கலை வளர்ப்போம் விட்டு விரைவில் உரையை முடித்துக் கொள்வதே நல்லது! நண்பர் காட்டூரார் கூட்டத்தைப் பார்த்ததும் நீண்ட நேரம் பேச விரும்பி புண்யகோடி கதையையும் தொடங்கி விட்டார். - அந்தக் குடும்பத்தின் வறுமை கஷ்டம் அதனால் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த கொடுமை எல்லாவற்றையும் அடுக்கிவிட்டு, அவர்களைக் கிணற் றடிக்கு அழைத்து வந்துவிட்டார். முதல் பிள்ளை மணி மேகலை என்று பெயரையும் கூறிவிட்டு, அத்துடன் நிறுத் தாமல் அதன் வயது ஐந்து என்று கூறி, அதைத் தூக்கி அந்தப் பெற்றோர் கிணற்றில் போட்டதைச் சொன்னார். இன்னும் ஐந்து குழந்தைகளுக்கு வயது சொல்ல வேண்டுமே! இரண்டாவது குழந்தைக்கு வயது மூன்று என்றார்! மூன்றாவது குழந்தைக்கு வயது இரண்டு என்றார்! நான்காவது குழந்தைக்கு வயது ஒன்று என்றார்! ஐந்தாவது குழந்தைக்கு... வயதைச் சொல்ல முடியாமல் தடுமாறினார்! மணிமேகலை வயது பதின்மூன்று என ஆரம்பித்திருந் தால்தான் கணக்கு சரியாக வந்திருக்கும். வயதில் தடு மாறியவுடன், கவலைப்பட வேண்டிய மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். ய அது மட்டுமல்ல; இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை வெறும் செய்தி சொல்வது போலச் சொல்லிக் கொண்டிருந்தால் அதன் வாயிலாக உருவாக்க நினைக்கிற உணர்ச்சியை யும்,எழுச்சியையும் நிச்சயமாக மக்கள் மத்தியில்உருவாக்க முடியாது. பேச்சாளர்கள் அவரவர்களுக்கென்று ஒரு தனியான பாணியை அமைத்துக் கொள்ளவேண்டும். அவரைப்போல் பேசுகிறார்; இவரைப்போல் பேசுகிறார் என்று மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க முனைந்து விட்டால் பிறகு அந்தப்