பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பேசும் கலை வளர்ப்போம கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான். எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழி யுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி, கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய் விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக் கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக் காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்து விடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான். அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து "அட முட்டாளே! நானும் உன்னை கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங் கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய்- கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய்- இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியே விடுவாள்; அல்லது உன்னை அடித்துத் துரத்து வாள்" என்றான். அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக் காது என்றான். நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக் காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிட வேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிட வேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டுக்குத் திரும்பினர்.