பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 31 அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களை யெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான். அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து, "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்களா?" என்று அன்பொழுகக் கேட் டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரேஅதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப் போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்து விட்டான். மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து,"என்னடா, உன் மனைவி உன்னைவிட மூடமாக இருக்கிறாள்?" என்று கேட்டான். "அப்படியொன்று மில்லை. என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ கோபமோ இருந்தாலும் அதைப் பிறர் முன்னால் காட்டிக் கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்" என்றான் அந்த அறிவிலிக் கணவன். தங்கள் குடும்பத்துப் பிரச்சனைகளைப் பிறர் முன்னால் பெரிதுபடுத்தக் கூடாது என்பதற்கு இந்தக் கதை எடுத்துக் காட்டு!" மணமக்களுக்கு அறிவுரை வழங்குவதுபோல் நான் இதைச் சில இடங்களில் வாழ்த்துரையில் இணைத்துக் கூறியிருக்கிறேன். வ நாகையில் ஒரு திருமணம். அங்கு வாழ்த்துரைக்கச் சென்ற நன்னிலம் நடராசன் என்ற கழகப் பேச்சாளர் இந்தக் கதையை நகைச்சுவையுடன் கையொலியும் சிரிப்பொலியும் எதிரொலிக்கிற அளவுக்குச் சொல்லியிருக் கிறார். அதே மண விழாவுக்கு இன்னொரு பேச்சாளர் தாமத மாக வந்திருக்கிறார். அவருக்கு நன்னிலம் நடராசன்