32 பேசும் கலை வளர்ப்போம் இந்தக் கதையைச் சொன்னது தெரியாது. அவரை வாழ்த்த அழைத்த போது அவரும் இதே கதையை மிகவும் அழகுபடவும் சுவையாகவும் நீட்டி முழக்கியும் சொல்லி யிருக்கிறார். மக்களிடமிருந்து எந்தவிதமான வரவேற்பும் இல்லை. பலர் எழுந்து போகத் தொடங்கினர். சிலர் கேலியாகப் புன்னகை புரிந்தனர். பேசி முடிந்ததும் பேச்சாளர், நடராசனைப் பார்த்து "என்ன நடராசா! கலைஞர் சொன்ன கதையைச் சொன் னேன். ஒருவரும் ரசிக்கவில்லையே?" என்று வியப்புடன் கேட்டிருக்கிறார். "அண்ணே, நான் அந்தக் கதையை முதலிலேயே சொல்லிவிட்டேன்" என்று நடராசன் சிரித் திருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற சொற்பொழி வாளர்கள், தங்களுக்கு முதலில் பேசியவர்கள் என்ன பேசி னார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். நிகழ்ச்சிக்குத் தாமதமாக வர நேரிட்டால் மேடையில் உள்ளவர்களிட மாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் பேசியதையே அடுத்தவரும் அதே நிகழ்ச்சியில் திரும்பப் பேசினால் அப்படிப் பேசுகிறவர்களுக்கு ஏமாற் றமே மிஞ்சும். அதிலும் குறிப்பிட்ட குட்டிக் கதைகள், உவமைகள், உதாரணங்கள் கூறுவதில் தனக்கு முன் பேசியவர் எது குறித்துப் பேசினார் என்பதைத் தெரிந்து கொண்டு பேசுவது மிக முக்கியம். 7 உருவத்திற்கும் பருவத்திற்கும் ஏற்ற வண்ணம் பேச்சு அமைந்திட வேண்டும் என்பது கூட அலட்சியப்படுத்திடக் கூடிய கருத்தல்ல! சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலும் என் னுடைய முன்னிலையிலும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை