34 பேசும் கலை வளர்ப்போம் இதேபோன்ற தவறு சொற்பொழிவாற்றும் மேடை களிலும் ஏற்படுவதுண்டு. பருமனாக உள்ள ஒருவர் ஏழைப் பாட்டாளிகளைப் பற்றிப் பேசும்போது, தன்னை யும் அவர்கள் பட்டியலிலே இணைத்துக் கொண்டு, "எங்களின் பஞ்சடைந்த கண்களைப் பாருங்கள். பசித்துக் குமுறி குமுறி ஒட்டிய ஒட்டிய வயிறுகளைக் காணுங்கள். உலர்ந்த உதடுகளை நோக்குங்கள். வாடிய மேனியை மேலும் வதைக்கும் வறுமை நீங்க வழி காணுவோம் வாருங்கள்!" என்று பேசினால்; கூட்டத்திலிருப்போர் அந்த உரை யில் உள்ள உணர்வை மறந்துவிட்டு, உரையாற்றுபவரின் உடலை விமர்சித்துக் கொண்டிருப்பார். ஏழை எளியோருக்காக வக்காலத்து வாங்கிப் பேச வேண்டுமே தவிர, பேசுகிறவர் வசதி படைத்தவராக இல்லாவிட்டாலும் கூட, தன்னையும் பஞ்சடைந்த கண்கள் கொண்டோர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு பேசுவது உரிய பயனைத் தராது. புல் தடுக்கினால் கீழே விழக்கூடிய அளவுக்கு உடல் வலிவு படைத்தவர்களாக இருக்கும் பேச்சாளர்கள். அலெக்சாண்டரின் ஆற்றலை நெப்போலியனின் அஞ்சா நெஞ்சத்தை-சேர சோழ பாண்டியர்களின் வீரவரலாற்றை விவரித்துச் சொல்வதின் மூலம் கூடியிருக்கும் மக்களைக் கவரலாம். ஆனால், அந்தப் பேச்சாளர்கள் தங்களின் உள்ளத்து உறுதியை உ வெளிக்காட்டுகிற அளவுக்கு வார்த்தைகளைத் தொடுக்க வேண்டுமேயல்லாமல்- தங் களின் உடல் வலிவை மிகைப்படுத்திப் பேசினால் அதனை மக்கள் ஏகடியமாகக் கொள்வார்களே தவிர, பேச்சாளரின் உணர்வுகளோடு ஒன்றிவிட மாட்டார்கள். உருவத்தைப் போலவேதான் பருவமும்! வயதுக்கேற்ற பேச்சாக இருக்க வேண்டும். வயது மீறிய பேச்சுக்களை ஏதோ ஒப்புக்குப் பாராட்டுவார்களே தவிர அந்தத் கருத் துக்களுக்கு உரிய மதிப்பை மக்கள் வழங்கமாட்டார்கள்.
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை