பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 35 "ஒளவைப்பாட்டி ஆத்திச்சூடி இயற்றினார். அறஞ் செய விரும்பு-ஆறுவது சினம் போன்ற ஔவையாரின் அறிவுரைகளை நாம் இந்த இளமைக் காலத்தில் மட்டுமல்ல; எதிர்காலத்திலும் மறந்துவிடக் கூடாது” இப்படியொரு சிறுமியோ, சிறுவனோ பேசும்போது இயற்கையாக இருக்கும். அதே சிறுமி அல்லது சிறுவன்; . "ஒளவையார் என்ற பெயரில் ஒருவர் மட்டுமல்ல? வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள். புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள ஔவை வேறு!-ஆத்திச்சூடி பாடிய ஔவை வேறு இரண்டு ஒளவையார்களையும் ஒருவரேயென எண்ணிக் குழப்பிக் கொள்வது கூடாது!" எனக் கூறிவிட்டுப் புறநானூற்றுப் பாடல் ஒன்றையும் பாடிக் காட்டினால், அது இயற்கையானதாகவோ, அந்தச் சிறுமியோ சிறுவனோ உணர்ந்து பேசுவதாகவோ அமை யாது. வயது வந்தவர்கள் மட்டுமே பேசக் கூடியதை இளை ஞர்கள் பேசுவதும் வயது வந்தவர்களும், வயது முதிர்ந்த வர்கள் மட்டுமே பேசக்கூடியதைத் தங்களின் வரம்பை மீறிப் பேசுவதும்-சுவைக்கத் தக்கவைகளாக இருந்திட மாட்டா! "கல்யாணம் பண்ணிக்கிறதே முட்டாள்தனம்! ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரையொருத்தர் விரும்பினால் அவுங்க பாட்டுக்கு ஒழுங்கா வாழ்க்கை நடத்த வேண்டியதுதான். பிடிக்கிலேன்னா ரத்து பண்ணிட்டு போக வேண்டியதுதான். கல்யாணங் கிறத்திலே என்ன புனிதம் வந்து கிடக்கு : வெங்காயம்!” இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் மேடையில் மணமக்களையும் அவர்களது உற்றார் உற வினர் நண்பர்களையும் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் பெரியார் ஒருவரால்தான் பேச முடிந்தது!