36 பேசும் கலை வளர்ப்போம் அவரது வயது-உழைப்பு-தியாகம்-ஓய்வில்லாத தொண்டு - கொள்கைக்கும் அப்பாற்பட்டு அவரிடம் ஆத்திகர்களும்கூடக் கொண்டிருந்த மரியாதை-இவ்வள வும் அவருக்குத் துணை நின்ற காரணத்தால் திருமண வீட்டிலேயே திருமணத்தை எதிர்த்து அவர் பேசியபோது அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டா லும்; வெறுப்பைக் காட்டாமல் மகிழ்ச்சியுடன் ரசித்தனர். பெரியார் போலப் பேசுவதாக எண்ணிக்கொண்டு வேறு யார் அப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாணி யில் மேடைகளில் உரையாற்றினாலும் எதிரே வீற்றிருப் போர் முகஞ்சுளிக்கவே செய்வர். ற அழகு தமிழில் வாக்கிய அமைப்புக்களோடு சொற் களை வரிசைப்படுத்திப் பேசுகிற வழக்கம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு இல்லை. ஆனால் மக்களின் பிரச்சினைகளை அவரது பேச்சின் மூலம் அணுகும் முறை தனித்தன்மை வாய்ந்தது. தங்களுக்காக பேசுகிற ஒரு தலைவர் என்ற நிலையில் மக்கள் அவரது நீண்ட சொற் பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்பார்கள். அவரது வயது, செயல் திறன், தியாகம், உழைப்பு, செல்வாக்கு, இவை யனைத்தும் அவரது பேச்சுக்கு அடித்தளமிட்டிருந்தன. எனவே, அவரது உரையில் எளிமையே மிகுந்திருந்ததை யும் மக்கள் குறையாகக் கருதாமல்-அவர் சொன்ன கருத்துக்களை மனநிறைவோடு ஏற்றுக்கொண்டனர். "பெருந்தலைவர் காமராஜரைப் போலப் பேசினேன்; மக்கள் ஆர்வத்துடன் கேட்கவில்லையே!" என்று எந்தப் பேச்சாளராவது ஆதங்கப்பட்டுக் கொள்வார்களேயானால் --அந்தப் பேச்சாளர் காமராஜராக வளரவில்லையே என்பதுதான் நமது பதில். 8 அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சொற்பொழிவாள் ராகத் தமிழகத்தில் அறிமுகமான தொடக்கக் காலத்திலே
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை