பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பேசும் கலை வளர்ப்போம் அண்ணாவுடன் நானும் சென்றிருந்தேன். ஆரம்ப முதல் ஒரே அடுக்குச் சொல் வசனம்தான்! "பேயனே! அந்தப் பேப்பரை எடுத்துவரச்சொன் னால், என்னமோ பிரமாதமாக நின்றுகொண்டு பிர்மராட் சனைப்போலப் பேந்தப் பேந்த விழிக்கிறாயே!" இதுபோன்ற வசனங்களுக்கெல்லாம் ஒரு உச்சகட்டம் என்ன தெரியுமா? வில்லன். கதாநாயகனைப் பார்த்து, "உன் விஷயத் தில் நான் சர்ப்பமாக இருப்பேன்" என்கிறான். உடனே கதாநாயகன் வில்லனை நோக்கி, "நான் சர்ப்பத்தையும் சாம்பார் வைத்துச் சாப்பிடுவேன்" என்கிறான். "அய்யோ அடுக்குச் சொல் படும் பாடே!" என்று அண்ணாவும் மற்றவர்களும் நினைத்துக் கொண்டோம்! "மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மிருக்கும்!" மண வேலை "சாலையோரத்தில் வேலையற்றதுகள். யற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்! வேந்தே! அதுதான் காலக் குறி!" இப்படி எழிலார்ந்த நடைபோட்ட அண்ணாவின் அடுக்குச் சொல்லைக் கையாண்டு எல்லோரும் வெற்றி பெற்றுவிட முடியவில்லை. காரணம், அவர்கள் கையாண்ட அடுக்குச் சொற்களில் கருத்தோட்டமில்லை. அண்ணா அவர்களேகூட, தனது பேச்சுக்களையும் எழுத்துக்களையும் மக்களுக்காகப் புரியவைப்பதில்-அவர் களது இதயங்களில் பதியவைப்பதில்- அக்கறை காட்டி னாரே தவிர-வெறும் அடுக்குச் சொல்லை அடுக்கி சொல்லவேண்டியவைகளைச் சொல்லாமல் விட்டுவிட்ட குறைப்பாட்டுக்கு என்றைக்குமே தன்னை கொண்டதில்லை. ஆளாக்கிக் மேடையில் பேசுவதற்கு எடுத்துக்கொள்கிற பொருள் தான் மிக முக்கியம்! பொன் கட்டியைப்போன்றது பொருள்