பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 39 என்றால், அதனை அணியாகச் செய்து மெருகேற்றிடுவது தான் சொற்களும்சுவையான உவமைகளுமாகும்! மேடையில் ஏறி நின்று வெறும் வார்த்தை ஜாலங்கள் புரிந்துவிட்டு, தனக்குத் தெரிந்த நாலு கவிதைகளை அழகாகக் கூறிவிட்டு, எந்தக் கருத்தையும் வலியுறுத்தி மக்கள் உள்ளத்தில் பதிய வைக்காமல் இறங்கிவிட்டால், ஏதோ ஒரு வாத்தியக் கருவி செய்த வேலையைத்தான் செய்ததாக ஆகும்! அந்தச் சங்கீதத்தைச் சிறிது நேரம் ரசிப்பது போலத்தான் அந்தப் பேச்சையும் மக்கள் ரசிப் பார்கள்! இதயமற்றவரைப் போல ஒரு முதலமைச்சர் நடந்து கொண்டு, மக்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்து விட்டதை ஒரு முறை, கடற்கரைக் கூட்டத்தில் அண்ணா குறிப்பிட்ட அழகே அழகு! "நமது முதல்வருக்கு உள்ளமிருக்குமென்று நம்பி னேன்! ஆனால் பாவம்; அவருக்கு உள்ளம் இருக்க வேண்டிய இடத்திலே ஒரு பள்ளம்தான் இருக்கிறது!" "உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன!" சட்டசபையில் விநாயகம் அவர்கள் அண்ணாவை நோக்கி இந்தச் சொற்களை வீசியவுடன், "என் அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன!” என்று அண்ணா பதில்அளித்த பாங்கினைவி நாயகமே வியந்து போற்றினார். சட்டக் கல்லூரியில் ஒரு விழா! நானும் குமரிஅனந்தன் அவர்களும் கலந்து கொண்டோம்! அவர் என்னை விளிக் கும்போது; "குறளோவியம் போல் விளிக்கிறேன் "மு.க." அவர்களே!" என்றார். நான் அவரை விளிக்கும்போது, "நானும் குறள்போல விளிக்கிறேன்; "அன்புள்ள குமரி" அவர்களே!" என்று கூறினேன். ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி ஆரவாரப் புரிந்தனர்.