பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 41 சொல்வதற்காக அவரைப் பார்த்துக் குழந்தையின் தகப் பனார் பெயர் என்னவென்று கேட்போம்! உடனே அவர் "நான்தான்" என்பார். பரபரப்பில் பெயரைச் சொல்லத் திணறுவார். பிறகு ஒரு வழியாகத் தன் பெயரைக் கூறு வார். அவரது பெயர் அப்துர் ரகுமான் என்று இருக்கும். அந்தக் குழந்தைக்கு என்ன பெயரை அவர் விரும்பு கிறார்-இஸ்லாம் மார்க்கத்துக்கேற்றபெயரையே விரும்பு கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆம் என்றால் ஷாஜகான்- ஜகாங்கீர்- இக்பால்- என்பன போன்ற பெயர்களில் ஒன்றை ஆண் குழந்தைக்கும், நூர்ஜகான், மும்தாஜ், கதீஜா போன்ற பெயர்களில் ஒன்றை பெண் குழந்தைக்கும் சூட்ட வேண்டும். அந்தப் பெயர்களைக் கேட்டுப் பெற்றோரும் அவர்கள் உற்றாரும் மகிழ்ச்சி அடைவர்! பொதுவான பெயர்களைச் சூட்டுவதெனில் கதிரவன், கதிரொளி, அன்புமணி, அறிவுமணி, கனிமொழி, கயல் விழி, எழிலரசி என்பன போன்ற எல்லா மதத்தினருக்கும் பொருந்தக்கூடிய பெயர்களைச் சூட்டலாம். இப்படிப் பெயர் வைப்பதிலேயிருந்து கூட்டத்தில் பேசிப் பெயரெடுப்பது வரையில் பேச்சாளர்கள், மிகுந்த அக்கறையுடன் இருந்திடல் வேண்டும். மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு அ.தி.மு.க. ஆட்சியினரால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டையொட்டித் திறந்து வைக்கப்பட்ட சுற்றுலா வாரிய ஓட்டலுக்கு "இராசராசன்" என்று பெயர் சூட்டி, அதற்கான பெரிய அளவு விளம்பரங்கள் அனைத்தும் செய் யப்பட்டன. ஓட்டல் முகப்பில் "இராசராசன்" என்ற பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், திடீ ரென்று திறப்புவிழா நாளன்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் பெயரை அகற்றச் சொல்லிவிட்டார்.