42 பேசும் கலை வளர்ப்போம் அச்செயல் தமிழ்நாட்டு மக்கள் உள்ளத்தில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. அச்சமயம் எனது சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் தஞ்சை திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தன. அந்த நிகழ்ச்சிகளின்போது மேடைகளில் என்னிடம் பெயர் சூட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட ஆண் குழந்தைகள் பலருக்கு "இராசராசன்" என்றே பெயர் வைத்தேன். உடனே கூட்டத்தினர் "இராசராசன் வாழ்க!" என முழங்கினர். பெயர் வைப்பதில்கூட மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் தம் இதய ஒலியை எதிரொலிக்கப் பயின்றிருக்க வேண்டுமெனில், நாட்டில் உள்ள எத்தனையோ பிரச்சினைகளில் மக்களின் கவனத் தைக் கவருவதற்கு ஏற்றவண்ணம் பேசும் கலையை வளர்த்துக் கொள்ளுதல் இன்றியமையாதது அல்லவா? "ஈஸ்த்துகிணு போ!" என்ற சென்னை தமிழும், "எலே!வாவே!" என்ற நெல்லைத் தமிழும், "அந்தாண்டே! இந்தாண்டே" என்ற தஞ்சைத் தமிழும் "கீறியா? என்னப்பா பேப்பர் கீதா?" என்ற வட ஆற்காட்டுத் தமிழும், இவ்வாறு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுகிற தமிழும் - பேசுகிறவர்கள்; மேடையில் ஏறிப் பேசினால் அவர்கள் நல்ல பேச்சாளர்கள் என்றால், எந்த மாவட்டத் தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மேடைக்கேற்ற இலக் கணத் தமிழையே பேசுவர்! சொற்பொழிவு மேடைக்கு அத்துணைச் சக்தி உண்டு! அந்தச் சக்தியை அலட்சியப்படுத்தி, எந்தப் பேச்சாள ராவது தாங்கள் பழக்கத்தில் பேசுகிற வழூஉச்சொற் களையே மேடையில் பயன்படுத்தினால் அவர்கள் நல்ல பேச்சாளர் பட்டியலில் இடம் பெறமாட்டார்கள். ஏதோ அந்தக் கூட்டத்தில் சொல்லவேண்டிய கருத்தைச் சொன் னார் என்ற அளவிலேதான், அவரது பேச்சு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், அவர் ஒரு பேச்சாளராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார். ய
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை