10 பேசும் பொருளில் கவனம் செலுத்துவதைப் போல- பேசும் பாணியில் கவனம் செலுத்துவதைப் போல, ஒரு பேச்சாளர் உச்சரிக்கும் சொற்களும் பிழையின்றி அமைய வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். 66 "ல", "ள" இரண்டும் இடையினம்தான் என்பதற்காக 'அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று ஆவேசமாகக் கேட்கும் கட்டத்தில் "அவர்கல் என்ன சொன்னார்கள்?' என்று எவ்வளவு ஆவேசமாகக் கேட்டாலும், அது மக்கள் மத்தியில் 'அபஸ்வரமாக' ஒலிக்கும் இப்படி "லகர" “ளகர”த்தை” இடமாற்றிப் போட்டுப் பேசுகின்ற சொற் பொழிவாளர்கள் பலர் இருக்கிறார்கள். கன்னனைக் காணச் அவள் கொண்டு சென்றான்." சென்ற குசேளன், கையில் எவ்வளவு பிழைகள் பார்த்தீர்களா? அவல் கொண்டு சென்றான் என்பது 'அவளாக' மாறும்போது எவ்வளவு விபரீதம்! "ல" கரத்தை "ள" கரமாகவும்! "ள" கரத்தை "ல" கரமாகவும் "ன" கரத்தை "ண" கரமாகவும் "ண" கரத்தை "ன" கரமாகவும் மாற்றி உச்சரிக்கும் பெரும் பிழையினைத் திருத்திக் கொள்ளப் பேச்சாளர்கள் முன்வர வேண்டும். திக்குவாய் படைத்தவர்கள், தங்களின் அயராத முயற்சி யால் நல்ல கருத்துக்களை ஒழுங்குபட எடுத்துச் சொல்லு கிற ஆற்றலைப் பெற்றிருப்பதைக் காண முடிகிறதல்லவா? அதனால் உச்சரிப்புப் பிழைகளைத் திருத்திக் கொள்கிற அளவுக்குப் பேச்சாளர்கள் முயற்சியைத் தொடர்ந்து மேற் கொண்டால் வெற்றி கிட்டாமற் போகாது! ஒரு சில பேச்சாளர்கள் தாங்கள் சொல்ல விரும்புகிற விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதாக எண்ணிக்கொண்டு ஒரு பெரும் தவறு செய்கிறார்கள்.
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை