44 பேசும் கலை வளர்ப்போம் "நமது மொழியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால், நமது நாடி நரம்புகளில் எல்லாம் சூடும் சுவையும் ஏறுகிறது." இதில் "பற்றிச்" என்பதில் "ச்" என்ற எழுத்தைத் தேவைக்கு அதிகமாக அழுத்துவார்கள். "சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால்" என்று தேவையில்லாமல் "ச்" என்ற எழுத்தைப் பேசும்போது பயன்படுத்துவார்கள். நாடி நரம்பு" என்பதை "நாடி நறம்பு" என்று பல்லைக் கடித்துக்கொண்டு உச்சரித்து "நறம்புகளில்" என்று அழுத்திக்கூறுவார்கள். இவையனைத்தும் குறையுடைய சொற்பொழிவுகளேயாகும். சட்டப் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்பு கிறேன். 1957-ல் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு உறுப்பினராக நான் அமர்ந்திருக்கிற காலம்! பேரவையில் உறுப்பினர்கள் அவையின் மரபுக்குப் புறம் பான சொற்களைப் பயன்படுத்தினால், அதைச் சபாநாய கரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல மற்றொரு உறுப் பினர் ஒழுங்குப் பிரச்சினை யெழுப்பி சுட்டிக்காட்டலாம். அது ஒழுங்குப் பிரச்சினையா-அல்லவா என்பதைச் சபா நாயகர் தீர்மானித்து, மரபுக்கு மாறாகப் பேசிய உறுப்பின ருக்கு அறிவுரை கூறுவார். அல்லது அந்தக் கருத்துக் களை சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட உத்திரவிடுவார். 1957-காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் கடும் மோதல் இருந்த காலம். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்.தி.மு. கழகத்தைச் சட்டசபையில் மிகவேகமாகக் கண்டித்துப் பேசக் கூடியவர். எனக்கு அவர்மீது மிகுந்த கோபம் உண்டு. தனிப்பட்ட முறையிலே அல்ல! அவர் பேசுகிற முறையிலேதான்! ஒருநாள் அவரைச் சபையில் சிக்கவைக்க ..
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை