பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 47 மாலையிலோ நடிகர்கள் தங்களது முக்கிய வசனங்களை உரக்க உச்சரித்துப் பார்த்துக் கொள்கிறார்கள். அதைப் போலவே பேச்சாளர்களும் தாங்கள் பேசப் போகும் கருத்துக்களை மேடைக்குப் போவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை வரிசைப்படுத்தி, எண்ணிப் பார்த்து அதன் பிறகு மேடையேறினால், நல்ல சொற் பொழிவாளர் என்ற வெற்றி முகட்டை விரைவில் அடையலாம். பேச்சுத்திறன் ஓரளவு பெற்றவர்கூட அவசரத்திலும், ஆத்திரத்திலும், நிதானமிழந்து பரபரப்புக்கு ஆட்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சொல்ல வந்ததை மறந்து, தடுமாறி, சொல்லக் கூடாததைச் சொல்லிப் பின்னர் வருந்துவதுண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோயிலில் தி.மு.கழக மாவட்ட மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை இன்றைய தி. மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சிலாரும் நண்பர் ஜான் என்பவரும் முன்னின்று நடத் தினார்கள். அந்த மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பேச்சாளர் பேசினார். அவர் இப்போது கழகத் தில் இல்லை. வேறு கட்சியில் இருப்பதாகக் கேள்வி. 66 நாட்டில் ஏற்பட்டிருந்த வறுமை நிலையைக் குறிக்க அவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதுண்டு. "திண்டுக்கல்லிலேயிருந்த மதிப்புக்குரிய எட்டு தோழர்கள் கத்தாழைக் கிழங்குகளைச் சாப்பிட்டுச் செத்து விட்டார் கள்" என்ற செய்தியை; நான் எழுதியுள்ள இதே வாக்கிய அமைப்பில் பல கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். ஆனால் அன்று நாகர்கோயில் மாநாட்டில் பேசும்போது "திண்டுக்கல்லிலேயிருந்த எட்டுத் தோழர்கள், மதிப்புக் குரிய கத்தாழைக் கிழங்குகளைச் சாப்பிட்டுச் செத்துவிட் டார்கள்” என்று பேசிவிட்டார். மதிப்புக்குரிய தோழர்