பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய "பேசும் கலை வளர்ப்போம்" என்ற இந்நூலைத் தமிழ் மக்களுக்குப் பெருமையுடன் தருவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் அவர்கள், ராஜாஜி அவர்களால் பாராட்டப் பெற்று முதலமைச்சராக ஆனவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. பாரதி நிலையம், ராஜாஜி வழியில் வளர்ந்து வந்த ஸ்தாபனம். ஆகவே ராஜாஜியால் போற்றப்பட்ட கலைஞ ரின் நூலை வெளியிடுவது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். கலைஞர் அவர்கள் "தொட்டது எல்லாம் துலங் கும்" என்பதை நான் நன்கு அறிவேன். கலைஞரின் நூல்களை வெளியிடவேண்டும் என்ற 'விருப்பம் எனக்குப் பல ஆண்டுகளாக இருந்து கொண் டிருந்தது. அதற்கு என் நண்பர் பாரி நிலையம் அதிபர் திரு. செல்லப்பன் அவர்கள் ஊக்குவித்து உறுதுணையாக இருந்தார்கள். அவர்கட்கு எங்கள் நன்றி. அதன் பிறகு நான் கலைஞர் அவர்களைச் சந்தித்து, உங்கள் புத்தகங்களை வெளியிட வேண்டும்" என்று என். விருப்பத்தைக் கூறிக் கேட்டபோது,எந்தவித யோசனையும் செய்யாமல், "என் நூல்களையெல்லாம் தமிழ்க்கனி பதிப் பகத்தார் வெளியிடுகிறார்கள். அவர்களிடம் அனுமதி பெற்றுப் போட்டுக் கொள்ளுங்கள். நானும் சொல்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார்கள். அதன் விளைவு தான் இந்நூல் எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளிவரு கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். . இந்நூலை வெளியிட உரிமை தந்த தமிழ்க்கனி பதிப்பகத்தார்க்கும், கலைஞர் அவர்கட்கும் எங்கள் நன்றி. கலைஞரின் பல நூல்கள் தொடர்ந்து எங்கள் வெளி யீடாக வெளிவரும் என மகிழ்ச்சியுடன் கூறி இந்நூலைத் தமிழ் மக்களுக்கு அளிக்கிறோம். தி.நகர் 15-7-81 } பழ. சிதம்பரம் நிர்வாகி,பாரதி நிலையம்