6 பேசும் கலை வளர்ப்போம் கவிதைச் சுவையைப் பருகுகிறோம்-அனைத்துக்கும் மேலாகத் தாய்மொழி உணர்வோடு கலந்துவிடுகிறோம். எனவே, இசைப் பாடலாயினும்,கூத்தாயினும்,அவை உணர்வு கலந்த கலையாக இருந்திடல் வேண்டும். மேடையில் பேசுவதும் ஒரு கலைதான்! இசையில், நடனத்தில், நாடகத்தில் அதற்குரியோர் ஏற்கனவே பயிற்சி பெற்று ஒத்திகை பார்த்துக்கொண்டு திரும்பத் திரும்ப அதே பாடலை, அதே ஆடலை, அதே நடிப்பை, அந்தந்த நிகழ்ச்சிகளுக்கேற்ப காட்டிட இயலும்! ஆனால், பேச்சுக்கலை அப்படியல்ல! ஜனநாயகம் வளர்ந்து வரும் இந்த யுகத்தில் எல்லாவற்றையும் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிக்கூடங்களிலேயே ளிப்புகள் என்று ஆரம்பமாகிவிடுகின்றன. ஊராட்ச்சி மன்றங்களில் பேச்சுப் போட்டிகள், பரிச ஊருக்குத் தேவையான விஷயங்களுக்காகப் பேச வேண்டியிருக்கிறது. நகராட்சி மன்றங்களிலும், மாநகராட்சி மன்றங்களி லும் அதே மாதிரியான தேவைகளைப் பற்றி நறுக்குத் தெறித்தாற்போல் பேச வேண்டியிருக்கிறது. சட்டமன்ற அவைகளில் தொகுதியைப் பற்றியும், மாநிலத்துப் பிரச்சினைகளைப் பற்றியும் சுவையாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது; சூடாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. பாராளுமன்ற இருஅவைகளிலும் நாட்டுப் பிரச்சினை, மாநிலங்களின் பிரச்சினை, அரசியல் சட்டப் பிரச்சினை, அந்நிய நாட்டுப் பிரச்சினையென்று எத்தனையோ பிரச்
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை