பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா "உயிர்மலம் தொழில் ஒலி நிரவு தும்மல் விழி செயிற்கொட்டாளி இமை வீங்கற்கால் ஈரைந்து" என்று பத்துக் காற்றுகளின் பெயர்களை பாங்குறக் காட்டியிருக்கிறது. இதையே பிங்கல முனிவரும் பின்வருமாறு பாடியுள்ளார். பிராணன் அபானன் உதானன் வியாணன் சமானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்செயன் என்றே வாயு ஈரைந்தாகும் இவை தாம் (32) இனி இந்த பத்து வகைக் காற்றுகளும், உடம்புக்குள் செய்கின்ற ஒப்பற்ற பணிகளை விவரமாகக் காண்போம். 1. பிராணன் இதை உயிர்க்காற்று என்பார்கள். இந்த உயிர்க்காற்று, இதய மண்டலத்தில் பரவி, இருந்து கொண்டு, சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, சுமுகமாக நடத்திச் செல்ல உதவுகிறது. மிகவும் முக்கியமான காற்று இது. இருதய மண்டலத்து இயங்கும் பிராணன் என்கிறது பிங்கலம் (33) 2. அபானன் . இதை மலக்காற்று என்பார்கள். இந்த காற்று கீழ்மண்டலத்திலிருந்து இயங்கி சிறுநீர் மற்றும் மலம் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றும் வேலைகளைக் கட்டுப்படுத்தி காரியமாற்ற உதவுகிறது. உச்சத் தலத்திடை நிற்பது அபானன் (34) 3. உதானன் . இதை ஒலிக்காற்று என்பார்கள். இது தொண்டைக் குழிப்பகுதியில் குடியிருந்து கொண்டு, சுவாசத்திற்காக உள்ளிழுக்கும் காற்றையும் வாய் வழியாக வருகின்ற உணவுகளையும் கட்டுப்படுத்தி, கலந்து விடாமல் காத்திடும் வண்ணம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.