பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா (8. எட்டு வகை பிராணாயாமம்) காற்றைப் பிடிக்கும் கலை தான் பிராணாயாமம் என்றோம். காற்றைப் பிடிக்கும் கணக்கு என்றும் தெளிவாக விவரித்தோம். இதன் சிறப்பை தெய்வச் சிறப்பை சித்தர் திருமூலர் இப்படி பாடுகிறார். "ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்றொன்று உண்டு” (திருமந்திரம் 545) உடல் என்னும் ஊரிலே ஐம்பொறிகளாகிய ஐவர்கள். கண், காது, மூக்கு, வாய்,மெய் என்னும் ஐந்து புலன்கள். இந்த ஐவர்க்கும் தலைவன் மனம். இந்த மனம் எனும் தலைவனுக்கு வாகனம் ஒன்று உண்டு. அதுதான் உயிர்ப்பு எனும் பிராணவாயு. இந்த மனம் எனும் தலைவன் ஏறி ஊர்ந்திடக் கூடிய குதிரையாகிய உயிர்ப்பு இரண்டு வகை 1. இடகலை 2. பிங்கலை இந்த உயிர்ப்புக் குதிரைகளை வயப்படுத்துதல் எளிதாகும். அதனை வாரிப்பிடிக்கும் உபாயந்தான் பிராணாயாமம் என்பதாகும். இடது முக்கால் காற்றை உள்ளிழுத்து உள்ளே அடக்கி வைத்து, மீண்டும் வலது முக்கால் வெளியே விடுகின்ற சுவாச முறையை எல்லோரும் தான் செய்கின்றனர். இயல்பாக செய்கின்றனர். அவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமலும் தெரியாமலும் செய்து கொண்டே இருக்கிறார்கள். அதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கணக்குடன் சுவாசித்து ஒரு கலையாகச் செய்வதைத்தான் பிராணாயாமம் என்றனர்.