பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா (по- பிராணாயாமம் தரும் பயன்கள்) சுவாசித்தல் என்பது உயிருடன் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் உள்ள ஒப்பற்ற அடிப்படை செயலாகும். சுவாசிக்கப்பட்ட வெளிக்காற்றானது உடம்பினுள்ளே சென்ற பிறகு, பல உன்னதமான காரியங்கள் நடைபெற உத்வேகம் ஊட்டுகிறது. உறுப்புகளுக்கு உற்சாகம் அளிக்கிறது. உறுப்புகளின் ஒருங்கிணைந்த நுட்பமான பணிகளுக்கு வந்து ஒர் உந்து சக்தியை வழங்குகிறது. சுவாசித்தல் என்பது இன்றியமையாத ஒன்று என்றாலும், அது பற்றிய விவரம் அறியும்போது, மிகவும் சுவாரசியமாகவே இருக்கிறது. நமக்குத் தேவையான உயிர்க் காற்றைப் பெறுவதற்காக, நாம் கொஞ்சம் அதிகமாகவே சுவாசித்தாக வேண்டும். என்பதுதான், இயற்கையின் எழுதாத கட்டளையாக இருந்து வருகிறது. இந்த உலகத்தில் சூழ்ந்து பரந்து கிடக்கின்ற, ஆவியாகத் திரிகின்ற புகை போன்ற காற்றுகள், எப்போதும் நம்மை சுற்றிச்சுற்றித்தான் இருக்கின்றன. அதன் அளவு எவ்வளவு என்றால் தோராயமாக விஞ்ஞானிகள் போட்டிருக்கின்ற கணக்கு 5000 மில்லியன் டன்கள் அளவாகும். அதில் உள்ள உயிர்க்காற்றின் அளவு 205 சதவிகிதம் தான் மற்ற காற்றுகள் ஆர்கன், கார்பன்டை ஆக்ஸைடு, ஹீலியம், நைட்ரஸ் ஆக்சைடு. ஒசோன் மற்றும் nனோன் என்பனவாகும்.