பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ எங்கே இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், உன்னுடைய சுவாசப் பணியை சுமுகமாக, சுதந்திரமாக செய்து கொண்டே இரு. அப்படி நீ ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டிருந்தால், உன் உடம்புக்கு அழிவில்லை என்கிறார். ஆக்கை என்றால் உடல் என்று அர்த்தம். உன்னதமாகப் பணியாற்றுகிற உறுப்புக்கள் பலவற்றால் ஆக்கப்பட்ட அருமையின் காரணமாகத்தான், உடலுக்கு ஆக்கை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பூரி என்றால் பூரகம். பூரகம் என்றால் மூச்சை உள்ளே இழுத்தல். உள்ளே இழுக்கும் கணக்கு 16 மாத்திரை. உள்ளே அடக்கி வைப்பது கும்பகம். அடக்கி இருக்கும் கணக்கு 64 மாத்திரை. காற்றை வெளியே விடுவது இரேசகம். இரேசகத்தின் கணக்கு 32 மாத்திரை அளவு. (நல்ல குருவிடம் கற்றுத் தெளிக) இப்படிச் செய்கிறதைத் தான், ஆங்கே அது செய்ய என்று ஒர் அழகான சொல்லால் குறிப்பிடுகிறார். ஆங்கே அது செய்ய செய்ய ஆக்கைக்கு அழிவில்லை. அதுமட்டுமல்ல, பிராணாயாமம் செய்கின்றவர்கள் மத்தியிலே நீங்கள் தலைவனும் ஆகிவிடலாம். ஆங்கே பிடித்து, அது விட்டு, அளவும் செல்லச் செல்ல நாம் முன்னே விளக்கியிருப்பதுபோல, சங்கு போன்ற பத்துவித ஒசைகள் உள்ளே எழும். அந்த நிலை வருகிறபோதே, பயிற்சியில் தலைவனாகி விடுகிறீர்கள் என்பது அனுபவக்கூற்று. காற்றுக்கு நாங்கள் எங்கே போவது என்று நீங்கள் கேட்க முடியாது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களைச் சுற்றிச் சுற்றியே காற்று, ஒட்டிக்கொண்டும், உரசிக்கொண்டும் இருக்கிறது. அதனால்தான், வெளியில் திரியும் வளியினை வாங்கி லயமாக நயமாக அடக்க வேண்டும் என்கிறார்கள். எப்படி லயமாக வாங்க வேண்டும் என்பதற்கும் ஒரு அருமையான பாடலையும் - - - - -