பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிடா டபடப _ _ _ "רע_v'-ה -- ישייוupL - - - - - - - - - - -اے இருக்கின்றனர். இங்கே உடல் சிவக்கும் என்று கூறாமல் உறுப்புச் சிவக்கும் என்று கூறியிருப்பதால், உள்ளர்த்தம் நிறைந்ததாகவே இது விளங்குகிறது. - உடலுக்குள் முக்கியத்துவம் பெற்று விளங்குவது இரத்தம். இரத்தம் உடல் முழுவதும் இதயத்தால் மறைக்கப்பட்டு, ஒடி, கடைசி வரை சென்று திரும்புகிறது. உயிர்க்காற்றையும் உணவுச் சத்தையும் ஏந்திக்கொண்டு உடல் முழுவதும் செல்கிற இரத்தம், இருப்பதைக் கொடுத்துவிட்டு, அங்கு உழைத்துக் களைத்த செல்களில் உள்ள கழிவுகளை வாங்கிக் கொண்டு மீண்டும் வருகிறது. பிறகு, சுவாசத்தால் பெறுகிற தூய உயிர்க் காற்றால், அசுத்த மடைந்த இரத்தம் மீண்டும் தூய்மை பெறுகிறது. இதற்குத்தான் பிராணாயாமப் பயிற்சி பேருதவி புரிகிறது. நிறைய சுவாசிப்பில் பிராணவாயு கிடைத்தவுடனேயே, இரத்தத்திற்குப் புதிய வேகமும் புத்துணர்ச்சியும் கிடைத்து விடுகின்றது. அதனால், இரத்த ஒட்டமும் தங்கு தடையில்லாமல் தேகத்தின் திசையெங்கும் துள்ளிப்பாய்ந்து விரைந்து ஒடி செழிப்பிக்கி இதைத் தான் தடைபடா குருதி ஒட்டம் என்று கூறுவார்கள். உயிர்க்காற்றால் உயிர்ப்புச் சக்தி அதிகமாகி, துடிப்புடன் இரத்தம், தன் தொழில் பயணத்தைத் தொடங்கி நடத்துகின்றது. இதனால்தான் உறுப்புக்கள் எல்லாம், இரத்தம் நிறையப் பெற்றுக் கொண்டிருப்பதால் தான் உறுப்புக்கள் எல்லாம் இரத்தச் சிவப்பாக விளங்குகின்றன. இரத்தம் தான் பெறுகிற நிறத்தினைப் பொறுத்தே, அதன் செழுமையும் சிறப்பும் வெளிப்படுத்துகிறது. இரத்தம் அடர்த்தியாகவும், ஆற்றல் மிக்கதாகவும் விளங்குகிற தென்றால், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களே முக்கிய ARrrr- -