பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

நியூயார்க் டாக்டர் ஜஸ்டஸ் ஜே. விப்பெரெஸ் (Justus 1. Schifferes) கருதுகிருர். அவர் மேலும் சொல்கிருர் : 'பிரசவம் எ ன்பது வெகு சராசரியான-இயல்பான தொரு நடப்பாக ஆகிவருகிறது இந்த நவீன யுகத்திலே. 1,500 அல்லது 2,000 பெண்களிலே ஒருத்திமட்டும்தான் பிரசவத்தில் பத்திரமாக உயிர்தப்பிக்கக் கூடாமல் போய் விடுகிருள். பிரசவப் பராமரிப்புக்கு இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி பெரி தும் பயன்பட்டு வருகிறது. புதிய ஆபரேஷன் முறைகளும் நூதனமான மருந்துக் கண்டு பிடிப்புகளும் வளர்ச்சியடைந்து வருவதால், சராசரி குடும்பத்தார்களும் கூட வீட்டில் பிரசவம் வைக்காமல் சகல வசதிகள் மிகுந்த ஜென ர ல் ஆஸ்பத்திரிகளையும் நர் ஸிங்ஹோம்களையுமே நாடுகின்றனர். 1920ல் செம்பாதி அளவு அமெரிக்கக் குழவிகள் வீடுகளிலேயே பிறந்தன; ஆளுல் இன்ருே, 90%அளவுக்கு சகல வசதிகளும் பெற்ற மருத்துவமனைகளில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. இயல்பான சுகப்பிரசவங்கள் (natural child birth) மிகவும் சகஜமாக ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இங்குள்ள கர்ப்பவதிகளுக்கு பிரசவத்தின்மீதுள்ள அச்சம் குறைத்து வருகிறது: . -

திருமணம் ஆனது முதற்கொண்டு அந்தத் தம்பதி இருவருக்குமே முதற் கனவாக இருப்பது குழந்தைதான்; 。 அவர்கள் இருவரும் அனுஷ்டிக்கும் விரதங் தர்மங்களும் -