பக்கம்:பொங்கற்பரிசு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இல்லத்தில் புதுப்பொங்கல்!

  தைப்பொங்கல் ǃ எழுந்தகதிர்

   வாழ்த்துப் பொங்கல் ǃ

2


விண்ணெங்கும் புத்தொளியாம் !

  வெளியெங்கும் நல்லழகு !
    தாய கத்தின்
கண்ணெங்கும் பொங்கலொலி !
  கையெங்கும் கணுக்கரும்பு
    கன்னிப் பெண்கள்
பண்ணெங்கும் தமிழ்முழக்கம் !
  மன்றெங்கும் தமிழ்க்கூத்து!
    வெற்றிப் பாட்டு!
மண்ணெங்கும் பெருவளப்பம் !
  வாயெங்கும் எழுந்தகதிர்

   வாழ்த்துப் பாவே !

3

6
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/14&oldid=1148890" இலிருந்து மீள்விக்கப்பட்டது