பக்கம்:பொங்கற்பரிசு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மண்ணெல்லாம் தேன்மணக்க,
வாயெல்லாம் நெய்மணக்க,
வளைக்கைக் கன்னிக்
கண்னெல்லாம் களிமணக்கக்,
காளையரின் தோள்மணக்கக்,
கரும்புப் பிள்ளைப்
பண்ணெல்லாம் தமிழ்மணக்கப்,
பாரெல்லாம் பால்மணக்கப்,
பைம்பொன் வீச்சாம்
விண்னெல்லாம் ஒளிமணக்க
மேலெழுந்த செங்கதிரை
வாழ்த்து வோமே !

3


காட்டிடையில் ஒலிபொங்கக்,
காலிடையில் நீர்பொங்கக்,
கவின்சேர் புட்கள்
கூட்டிடையில் இசைபொங்கக்,
குளிர்காவில் மணம்பொங்கத்,
தமிழர் நாட்டு
வீட்டிடையிற் பால்பொங்க,
வெளியெங்கும் ஒளிபொங்க,
வீட்டுப் பெண்கள்
பாட்டிடையில் தமிழ்பொங்க
வருமூசைப் பைம்பொன்னை
வாழ்த்து வோமே !

4

9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/17&oldid=1148968" இலிருந்து மீள்விக்கப்பட்டது