பக்கம்:பொங்கற்பரிசு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அலர்ந்ததடா புதுப்பரிதி!


விண்னெழுந்து வெருண்டோடி
மெய்சிலிர்க்க இடியிடித்து
மின்னல் மின்னிக்
கண்கவரும் மலையுச்சி
காராடும் மழைக்காலம்
கடந்து தாண்டிப்
பண்ணெழுப்பும் ஒடையிலே
பலபூக்கள் தேன்பிலிற்றப்
பைம்பொன் தேக்கி
விண்னெழுந்தான் விரிவானில்
தைமுதல்நாள் செங்கதிரோன்!
வாழ்க வாழ்க!

1


பகைசூழ்ந்த புலத்திடையில்
அகப்பட்டுத் தத்தளிக்கும்
படையைப் போலப்
புகைகுழ்ந்த வெளியினிலே
புதரிருக்க, ஊரிருக்கப்
பொலிவுண் டாக்கித்
தொகைகசூழ்ந்த தமிழ்மக்கள்
வகைகசூழ்ந்த வாழ்ந்திருக்கத்
தொடுவான் மீது
நகைசூழ்ந்து கீழ்த்திசையில்
எழுந்திருந்தான் நற்பரிதி !
வாழ்க! வாழ்க!

2

10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/18&oldid=1148972" இலிருந்து மீள்விக்கப்பட்டது