பக்கம்:பொங்கற்பரிசு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்த்தினர் பொங்கல்


நீள்மலை உச்சி குன்றுகள் சாரல்
நிலவிய மழைகுளிர் ஒட்டித்
தோளினைக் குலுக்கி வந்தது பரிதி !
குளிர்மலைக் குறத்தியர் சொந்த
ஆளனைக் கண்ட அரிவையர் போல
ஆடினர்; மயிலினம் ஆடும்
கோளரிக் குறவர் தேனடை பிழிந்து
கொடுத்தனர்; வாழ்த்தினர் பொங்கல்! 1


கண் நுழை யாத காடுகள் ஓடை
கருகிய முட்புதர் பூக்க
விண்ணிடை இன்று வந்தது பரிதி !
வேய்குழல் இசைத்தனர் ஆயர் !
வெண்ணெயைக் கடையும் ஆய்ச்சியர் கூந்தல் மெய்யெலாம் புதுமெரு கேறும்
பண்ணெடு பொங்கல் பாளிதம் கெய்மோர்
பகிர்ந்தனர்; வாழ்த்தினர் பொங்கல்! 2


இருள் மழை போக்கி, எரிகதிர் தேக்கி
மலர்மிசை எழுந்தது பரிதி !
அரும்புகள் அலர்ந்தன அடுப்பெலாம் பொங்கல்! ஆடலும் பாடலும் கேட்கும்!

13
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/21&oldid=1147594" இலிருந்து மீள்விக்கப்பட்டது