பக்கம்:பொங்கற்பரிசு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்த்துவோம் வா!


காவிளைத்து நன்செய் கதிர்விளைத்து நம்வாழ்வின் பாவிளைத்து வந்ததுவே தைப்பொங்கல்-நாவிளைக்கச் செந்தமிழால் நாம்பாடிக் கீழ்வான் புதுப்பரிதி வந்ததை வாழ்த்துவோம் வா ! 1


வெண்டா மரைபோல் விரிவானில் தைமுதல்நாள் கண்டோம்; புதுப்பரிதி கண்டோமே !-முண்டும் பசிக்கொடுமை ஒட்டிப் பழகு தமிழின் இசைவளர்ப்போம் வாரநீ எழுந்து! 2


 ஊனில், உயிரில், உலகப் பெருவெளியில்
வானொளியைச் சேர்த்தான் புதுப்பரிதி 1-மானே ! வடவர்க் கடிமையாய் வாழோம் ! திரண்டு விடுபடுவோம்! வாநீ விரைந்து ! 3


சுற்றி யிருந்த பகையோட்டிக்கீழ்வானில் வெற்றி வலம்வந்தான் வெய்யோனும் !-பெற்ற
திருநாட்டை, வாழ்வியலைத் தாயகத்தை மீட்டே வருவோம்! விரைந்தெழுந்து வா ! 4

16
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/24&oldid=1147751" இலிருந்து மீள்விக்கப்பட்டது