பக்கம்:பொங்கற்பரிசு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எங்கெங்கும் பொண்னொளி!


அவள்:செ ங்கதிர் வந்தது!
                 குங்குமப் பொட்டுப்போல்
              எங்கெங்கும் பொன்னுெளி அத்தான்!-
                 தைத் திங்களும் வந்ததே அத்தான் ! 1


அவன் :நீர் நிலை பூத்தது!
              நெல்வயல் காய்த்தது!
              ஊரெல்லம் பொங்கலோ பொங்கல்நாம்
              உண்டு மகிழ்வோம் பாற்பொங்கல்! 2


அவள் : குன்றம் மணக்குது !
             தென்றல் அடிக்குது!
             மன்கதிர் வாழ்த்துவோம் அத்தான் !-ஊர்
             மருங்கிடை ஆடுவோம் அத்தான்! 3


அவன் : அருங்கதிர், தைக்கதிர்
           அலர்ந்தது விண்ணிடை!
            வருங்கதிர் வாழ்த்துவோம் முன்னர்!குன்ற
           மருங்கிடை ஆடுவோம் பின்னர்! 4 .


அவள் : களிவண் டிசைக்குதே!
               காட்டா றழைக்குதே!
               ஒளிப்புனல் ஆடுவோம் அத்தான்!-பொங்கற்
               களிப்பினிற் பாடுவோம் அத்தான்! 5

20
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/28&oldid=1148227" இலிருந்து மீள்விக்கப்பட்டது