பக்கம்:பொங்கற்பரிசு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்த்துவோம் வாரீர்!


கீழ்க்கடல் நீல வான்நிறம் பொன்னாய்க்,
கிளர்ந்தெழு அலைகடல் பொன்னாய்ச்,
சூழ்ந்திடு சிற்றூர் மரஞ்செடி பொன்னாய்
மாற்றியே தோன்றினான் பரிதி!
ஆழ்ந்தநல் லறிவும், வளமையும், பண்பும்
அறநெறி வாழ்க்கையும் பெற்றே
வாழ்ந்தவர் வாழ வந்தது பொங்கல்!
வந்ததை வாழ்த்துவோம் வாரீர்! 1


நன்செயிற் செங்நெல், புன்செயிற் கரும்பு,
நற்கனி எங்கணும் பழுக்க,
மின்செயக் குழைகள், விழிவேல் பாய,
மெல்லியர் சிலம்பொலி ஆர்ப்ப,
இன்செயச் சிறுவர் கரும்பினைத் தூக்கி
எழுங்தெழுந் தாடிட முனைய
பொன்செயப் பரிதி தைமுதல் வங்தான்!
பொங்கலை வாழ்த்துவோம் வாரீர்! 2

28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/36&oldid=1146744" இலிருந்து மீள்விக்கப்பட்டது