பக்கம்:பொங்கற்பரிசு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புதுத் தை வந்தது!


கீழ்த்திசைக் கிளர்த்தெழு பரிதி கண்டனம்!
வாழ்த்தினம் வந்ததை ! மக்கள் வாழ்த்தினம்! ஆழ்கடல் ஒலியொடு பொங்கல் ஆர்ப்பொலி
சூழ்ந்திட, இன்பமும் வாழ்வும் சூழ்ந்ததே! 1


பாரினில் விண்ணிடைப் பரிதி கண்டனம்!
ஊரினில், ஊரிடை உள்ள வீட்டினில்,
நீரினில், நீரிடை நிலவு பூக்களில்,
ஏரினில், ஊனுடல் எங்கும் இன்பமே! 2


வாடையை ஒட்டியே வந்த தைமுதல்
ஆடலும் பாடலும் அயரும் கன்னியர்
எடவிழ் கண்மலர் கண்டு காளேயர்
தேடிய பொங்கலின் செந்தேன் என்பரே! 3


பொன்னொளி கண்டனம்! புதுத்தை வந்தது! தென்னவர் வாயெலாம் பொங்கல் வாழ்த்தொலி ! மின்னொளி வாய்மொழிச் சுவையே மிக்கெனக் கன்னலைக் கடிப்பவர் கவிதை யாப்பரே! 4


செங்கரும் பொடித்துனும் பிள்ளைச் செவ்விதழ் செங்கரும் பாமெனச் செப்பும் சேயிழை
துங்கவி மிமொழி துய்க்கும் கேள்வரும்
'பொங்கலைப் போன்றவர் புதல்வர்' என்பரே! 5

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/39&oldid=1147060" இலிருந்து மீள்விக்கப்பட்டது