பக்கம்:பொங்கற்பரிசு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்ணிட்ட பச்சரிசி புதுப்பானைப் பொங்கல்
விருந்தூட்டித் தமிழூட்டும் நற்பொங்கல் நாளில்,
மண்ணிட்ட வளமெல்லாம் பொதுவாக்கித்,தம்பி!
'திராவிடத்தைத் திராவிடரே ஆள்வ'மெனச் சொல்லே!

3


கற்றூணைப் பிளக்கின்ற தோளுடைய காளை
கார்முழக்கம் செய்கின்ற ஏர்தழுவக் கண்டு
சிற்றூரின் நடுவிருக்கும் மன்றத்திற் சிற்றூர்த்
திங்களெல்லாம் கடைக்கண்ணாற் சிரித்துநகை காட்டும்!
செற்றாரும் மறம்வாழ்த்தும் செந்தமிழைக் கேட்டுச்
செவிகுளிரும் கிழவர்களின் தோளுயரும் தம்பி!
ற்றமிழர் திருநாளில், தைப்பொங்கல் நாளில்
'திராவிடத்தைத் திராவிடரே ஆள்வ'மெனச் சொல்லே!

4



வாழ்க திராவிடம்!

சூழிய நன்மை; பகைமை தொலைக! அலைமுழக்கும்
ஆழிசூழ் கன்னித் தமிழ்மொழி வாழ்க! அறம்வளர்க!
வாழிய பொற்கதிர்! வாழிய அண்ணா! மறத்தமிழர்
வாழிய! வாழிய தாயகம்! வாழ்க திராவிடமே!

41
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/49&oldid=1148706" இலிருந்து மீள்விக்கப்பட்டது