பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி கிறார் என்பதை, கரையோரம் கூடியிருந்தோர் அனைவரும் கண்டு ஆச்சரியத்தில் அமிழ்ந்து போயினர். செல்லாண்டியம் மன் கோயிலுக்கு எதிரில் இருந்த மண்டபத்தில் அருக்காணித் தங்கத்துக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நிரம்ப நீர் குடித்து மயங்கியிருக்கிறாள் என்பதை உணர்ந்து அவளைக் குப்புறப் படுக்க வைத்து முதுகையும் தோள் பட்டையையும் பலமாக அழுத்தினாள் தாமரைநாச்சியார். மூச்சுத் திணறுகிற அளவுக்கு உட்புகுந்திருந்த தண்ணீர். வாய் வழியாக வெளிப் பட்ட பிறகு; அருக்காணித் தங்கம் மெல்லக் கண் விழித்தாள். அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு, "தங்கம்! தங் கம்! என்று ஆவலுடன் விம்மி விம்மித் தாமரைநாச்சியார் அழத்தொடங்கினாள். அழாதேம்மா! நான் நன்றாக இருக் கிறேன்" என்று தனது மலர்க்கொடி போன்ற கையால் தாயா ரின் கன்னத்தில் உருண்டு கொண்டிருக்கும் கண்ணீர்த்துளி களைத் துடைத்து விட்டாள் அருக்காணி! 44 "கூட்டம் போடாதீர்கள். எல்லோரும் போய் விடுங்கள். நல்ல காற்று வரட்டும்" என்று மாயவர், அந்த மண்டபத்துக் குள் குழுமியிருந்தவர்களை வெளியில் போகச் செய்தார். அவரும் குன்றுடையானும் தாமரையும் மட்டுமே அருக்காணி யின் அருகில் இருந்தனர். உனக்குத்தான் நீந்தத் தெரியாதே அம்மா -பின் எதற்காக இந்த வேலை செய்தாய்! அதுவும் ஆற்றுச் சுழலில் போய் யாராவது நீந்துவார்களா? ஏ, அப்பா! எவ்வளவு பெரிய மடு அது!" என்று குன்றுடையான், தனது மகளைப் பார்த்து உருக் கத்துடன் கேட்டார். "மசைச்சாமி என்பது சரியாக இருக்கிறது பார்! நீந்து வதற்கா அவள் ஆற்றில் குதித்தாள்?" என்று மாயவர். தனக் குத்தானே கேட்டுக் கொண்டு குன்றுடையானின் வெள்ளை மனத்தை எண்ணி உள்ளூரச் சிரித்துக் கொண்டார். 'அருக்காணி! என்னம்மா நடந்தது? யார் உன்னைத் துரத் தியது?' . மாயவர், மிகுந்த கனிவுடன் அவளைப் பார்த்துக் கேட்ட பொழுது; அவள் பதில் ஏதும் சொல்லாமல் கண்ணீர் வடித் தாள்.நீர் வடிந்தது கண்களில் என்றாலும் கூடவே நெருப்புப் பொறியும் பறந்தது. அதை மாயவர் கவனிக்காமல் இல்லை. தான் பார்த்ததை அவள் பார்க்காதது போல மறைத்துக் 103