பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் "பெயர்மட்டும் வீரமலை! வேகமா நடக்க முடியலியா?" சோழன் தோட்டியின் கேலிச் சிரிப்பும் அதைத் தொடர்ந்து சிறுவனின் முதுகிலே செல்லமாக ஒரு தட்டுதலும்! சோழன்தோட்டி பல ஊர்களில் முரசடித்து அறிவித்ததை யொட்டி ஆயிரம் இரண்டாயிரம் என்று ஏழை எளியோர் உணவு தானியங்களைப் பெறுவதற்கும், மலைக்கொழுந்தாக் கவுண்டர் மகள் தாமரை நாச்சியாரின் திருமணவிழாவைக் காண்பதற்கும் ஆரிச்சம்பட்டி யெனும் மணியங்குரிச்சியில் குழுமிடத் தொடங்கினர். - உணவு தானியம் வழங்கும் பந்தலில் கூடியிருந்தோர் குதூ கலிக்க குமரிகளின் கூட்ட மொன்று மேடையை நோக்கி வந்தது. விண் மீன்களுக்கு நடுவே ஒரு வெண்ணிலவு போல் தாமரை நாச்சி; தங்கரதமெனக் குலுங்கி ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்ட மேடையேறி நின்றாள். ஜொலிக்கும் அவளது அழகைக் கண்டு பந்தலில் வரிசையாக நின்றிருந்த பாட்டி மார்கள், அடியென் தங்கம்! ரதி மாதிரி இருக்கியே கண்ணு! என்று ஏற்கனவே ரதியைப் பார்த்தவர்களைப் போலத் தங் கள் பொக்கைவாய் திறந்து பாராட்டி வாழ்த்தினார்கள். வயதான ஆடவர்கள் கூட வாழ்க்கையில் சலிப்புற்ற தங்களது பருவத்தையும் மறந்து தாமரை நாச்சியை நோக்கி,வாயில் ஈ நுழைவது தெரியாமல் மரம் போல் நின்று விட்டார்கள். இளம் உள்ளங்களுக்குக் கேட்க வேண்டுமா? ஏழையாக இருப்பதிலும். ஒரு நல்ல வாய்ப்புதான் இல்லாவிட்டால் இன்றைக்கு இந்தப்பேரழகி கையினால் உணவு தானியம் பெற முடியுமா? வாங்குகிற சாக்கில் இவளைச் சிறிது நேரம் வைத்த விழி வாங்காமல் பார்த்தால் பிறகு வைகுந்த பதவி, சிவலோக பதவியெல்லாம் எதற்கு?. என்று அந்த வரிசையில் நின்ற வாலிபர்களில் பலர் எண்ணிப் பெருமூச்சு விட்டனர். . 1 உணவு தானியம் வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொருவராக மேடையருகே வந்தனர். கம்பா? வரகா? சோளமா? அரிசியா? என்று தாமரை நாச்சியின் தோழிகளில் ஒருத்தி கேட்பாள். அவரவரும் தங்கள் விருப்பத்தைச் சொல் வார்கள். அதனை எடுத்து ஒரு தோழி, தாமரையின் கையில் கொடுப்பாள். தாமரை அதை வழங்குவாள். அம்மா. நீ மகராசியா இரு! என்று மூதாட்டிகள் மொழிந்தனர். "பதி னாறும் பெற்று பெருவாழ்வு வாழு!" என முதிய பெரியவர் கள் அவள் தலையைத் தொட்டு வாழ்த்து பொழிந்தனர்.அவ ளது உடல்தான் அந்தப் பந்தல் மேடையில் இருந்ததே தவிர. அவள் உள்ளம் வேறெங்கோ அலைந்து திரிந்து கொண்டி 4