பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் என்ன சத்தியம்? அதிசயமான சத்தியம்? செல்லாத்தாக் கவுண்டருக்கு சத்தியம் செய்து கொடுத்தால் அதற்குத் திருடர் களைப் போல இரவு நேரத்தில் வழி மறித்துத் தாக்குவது தான் வீரமோ? ஆண்மையுள்ளவர்கள் என்றால் படையெடுத்து வருகிறோம் என அறிவித்துவிட்டு பட்டப்பகலில் அல்லவா மோதியிருக்க வேண்டும்?' 41 "தம்பி: இளம் ரத்தம் மிகவும் சூடேறிக் கொதிக்கிறது! தலையூர்க்காளியின் படையில் ஒரு பகுதி புறப்பட்டு வந்தாலே, உங்கள் ஆரிச்சம்பட்டி அரண்மனை புழுதி மேடாகி விடும்! படையெடுத்து உங்கள் ஆட்சியைத் தலையூரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்பது எங்கள் மன்னர் காளி யின் நோக்கமல்ல! அவரது எண்ணமெல்லாம் தனது புரவல ராகவும் நண்பராகவும் திகழும் செல்லாத்தாக் கவுண்டருக்கு விசுவாசமுடன் நடப்பதுதான்! உங்கள் மன்னர் தலையூர்க்காளி; யாருக்கு வேண்டுமானா லும் விசுவாசமாக நடக்கட்டும்! எங்கள் வழியில் குறுக்கிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?" 64 அவசியமின்றி எமது அரசர் எதிலும் தலையிட மாட்டார்! செல்லாத்தாக் கவுண்டர் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் ஆரிச்சம்பட்டியில் தலையூர் மன்னர் காளிக்கு முன் பாகவே அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்! என்ன தம்பி; புரியவில்லையா? உன் தந்தை சின்னமலைக்கொழுந்துவுக்கு இந்த விபரம் நன்றாகத் தெரியும்! அவருடைய தங்கை தாமரை நாச்சிக்கும் செல்லாத்தாக் கவுண்டரின் மகன் மாந்தியப்பனுக் கும் நடக்க இருந்த திருமணத்தை உன் தாத்தா மணியங்குரிச் சிக் காணியாளர் மலைக்கொழுந்துக் கவுண்டர் நடுவிலேயே நிறுத்தி விட்டார். அன்று ஏற்பட்ட அவமானத்தினால் மாந்தி யப்பன் இதுவரையில் திருமணமே செய்து கொள்ளவில்லை. தங்கையைத்தான் மாந்தியப்பனுக்குக் கொடுக்கவில்லை; தான் பெற்ற பெண்களையாவது கொடுப்பதற்குத் தடை சொல்லா மல் இருந்திருக்கலாம் அல்லவா? செல்லாத்தாக் கவுண்டர் பல முறை பெண் கேட்டு அனுப்பியும் உன் வீட்டார் அலட்சியப் படுத்தி விட்டார்கள் என்ற கோபத்தில்தான் தலையூர் மன்னர் துணையோடு உங்களைக் கைது செய்யும் திட்டத்தை வகுத்து; உங்களை ராச்சாண்டார் மலைக்கு அழைத்துச் செல்லவும் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.' 124 "ராச்சாண்டார் மலைக்கு எங்களை அழைத்துச் சென்று