பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வழியாக மாந்தியப்பன் உள்ளேயிருந்தவர்களைப் பார்த்துக் கெக்கலி கொட்டினான். அவர்கள் வெறுப்பை விழிகள் வழியே நெருப்பாகக் கொட்டினர். அந்தக் கோபத்தில் மாந்தியப்பன் பலகணியின் கண்ணாடியைத் தனது கைவாளின் பிடியினால் ஓங்கியடித்து உடைத்தெறிந்தான். இப்போது அவன் பேசுவது அறைக்குள்ளிருந்தவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. 66 'என்னை மணப்பதற்கென்றே மாயனால் படைக்கப்பட்ட மங்கையர் திலகங்களே! உங்களை மீட்டுக் கொண்டு போவதற் காக உங்கள் முட்டாள் தகப்பன் மட்டுமல்ல; முதலையோடும் மலைப்பாம்போடும் சண்டை போட்டு உங்களைக் காப்பாற் றிய அந்த முரட்டு வாலிபர்களும் வந்திருக்கிறார்கள். ✰' இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் முத்தாயி, பவளாயி இருவருக்கு மட்டுமல்ல - சிலம்பாயிக்கும் வையம்பெருமானுக் கும் கூட ஒரு ஆறுதல்! ஒரு நம்பிக்கை! அவர்களின் முக மாற்றத்தை உணர்ந்து கொண்ட மாந்தி யப்பன் அலட்சியமாகச் சிரித்து; மதுக் கிண்ணத்தை முத்த மிட்டுக் கீழே வீசி விட்டு "ஓகோ! அந்தப் பயல்கள் வந்திருப் பதால் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள் எனக் கருதுகிறீர்களா? அதுதான் நடக்காது! இங்கேயுள்ள படை, காவேரியாற்று முத லையோ-மலைப்பாம்போ அல்ல! கோட்டையிலிருந்து நாங் கள் நடத்தும் தாக்குதலில் உங்கள் ஆரிச்சம்பட்டிப் படை பாதிக்கு மேல் அழிந்துவிட்டது! இன்னும் சிறிது நேரத்தில் சின்னமலைக்கொழுந்தும், அவருக்குத் துணை வந்துள்ள அந் தச் சின்னப் பயல்களும் சிறை பிடிக்கப்படுவார்கள்! அதற் கடுத்து எனது திருமணம்! ஒரு பக்கம் முத்தாயி - இன்னொரு பக்கம் பவளாயி பாமா ருக்மணிக்கு நடுவில் பகவான் கண்ணபரமாத்மா போல நான் நிற்பேன்! - அறைக்குள்ளிருந்த அவர்கள் யாரும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு ஏற் பட்டிருந்ததால் அவனிடம் வீணாகப் பேசி வார்த்தைகளை விழலுக்கிரைத்த நீராக்க வேண்டாமெனக் கருதி அமைதியாகவே இருந்தனர். வெற்றிக் களிப்பும், மது வெறியின் உசுப்பலும் போட்டி போட்டுக் கொண்டு மாந்தியப்பனை ஆட்டிவைத்ததால் அந்த 142