பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி ஓரிரு கல் தொலைவு சென்றதும், குதிரையிலிருந்தவாறே சின்னமலைக்கொழுந்து பொன்னர், சங்கர் இருவரையும் நோக்கி; சங்கரன்மலையில் ஏற்கனவே உங்களுக்கு யாரும் அறிமுகம் உண்டா?" என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தார். அதற்குப் பொன்னர் பதில் சொன்னான்."எங்கள் ஆசான் ராக்கியண்ணன் இரண்டொரு முறை எங்களை அந்த இடத் துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நெல்லியங்கோடன் எனப் படும் குன்றுடையாக் கவுண்டருக்குச் சொந்தமான இடம் அது என்று சொல்லியிருக்கிறார். எப்போதாவது குன்றுடையார் சங்கரன்மலைக்கு வந்து அங்குள்ள மாளிகையில் தங்குவது உண்டாம். எங்கள் ஆசான் ராக்கியண்ணன் அந்த மாளி கைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும், எத் தனை நாள் வேண்டுமானாலும் தங்கலாமென்றும் குன்றுடை யார் அனுமதி வழங்கியிருப்பதாக எங்கள் ஆசானே சொல்லி யிருக்கிறார். அந்த அடிப்படையில் எமது ஆசான் எங்களை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். எனவே கடந்த கால அனுப வத்தை வைத்துத்தான் இப்போது நாம் அங்கு போவது உசித மென முடிவெடுத்தோம். சங்கரன்மலை மாளிகையில் நாம் போய் தங்கிவிட்டால் எதிரிகள் அவ்வளவு சுலபத்தில் உள்ளே நுழைந்து விட முடியாது. மாளிகையைச் சுற்றியுள்ள அரணும், அரணைச் சுற்றியுள்ள அகழியும் பகைவர்களின் பலத்தை நசுக்கக் கூடியவை. பொன்னரின் பதிலைக் கேட்டும் நிம்மதியடையாமல் சின்ன மலைக் கொழுந்து மற்றொரு சந்தேகத்தை எழுப்பினார். 'திடீரென்று,நாம் ஒரு படையுடன் சங்கரன்மலைக்கோட் டைக்குள் நுழைந்தால் அங்குள்ள தளபதிகளோ வீரர்களோ நம்மை அனுமதிப்பார்களா?' 'அந்தக் கவலையே தேவையில்லை! நான்தான் முன்பே சொன்னேனே; எங்களுக்குப் பழக்கமான இடமென்று! நமது ஆரிச்சம்பட்டிப் படை வீரர்களைக் கோட்டையைச் சுற்றி நிறுத்திவிட்டு, நாங்கள் அங்குள்ள காவலர்களிடம் நிலை மையை விளக்கினால் தங்குதடையின்றி வரவேற்று உபசரிப் பார்கள். 37 முழுமையான திருப்தி சின்னமலைக்கொழுந்துக்கு ஏற்பட வில்லையென்பதை அவரது முகம் காட்டியது. அதைப் புரிந்து கொண்டு சங்கர் அவரிடம் பேசினான். 149